‘2 நாட்களில் 9 கொலைகள்’ – இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல்.. முதல்வர் விஜய்யை விளாசிய உதயநிதி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Udhay

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மணிப்புரம் பகுதியில் பட்டப்பகலில் ஏற்பட்ட கை கலப்பில் டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர.

ADVERTISEMENT

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?

திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

ADVERTISEMENT

இது தவிர, மயிலாடுதுறை – திருவண்ணாமலை – சேலம் – கன்னியாகுமரி – தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.

இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?

இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share