அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு : மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

Published On:

| By Kavi

ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் தேர்தல் செலவை வசூலிக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அரசியல் ஆதாயங்களுக்காக இவ்வாறு செய்ததாக கூறி மதுராந்தகம் மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், கரூர் எம்ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காசி இராமலிங்கம் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில் இந்த ஆறு பேரிடமிருந்து தேர்தல் செலவுக்கான பணத்தை வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு, இன்று (செப்டம்பர் 29) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இதே கோரிக்கையுடன் சுதன் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விரும்பினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

ADVERTISEMENT

எனினும் மனுதாரர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் காசி இராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share