சிறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி

Published On:

| By Pandeeswari Gurusamy

பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயனை நேரில் சந்திதிக்க திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை வந்தார்.

பாளையங்கோட்டை மத்திய சிறைக்குச் சென்ற அவருடன் முன்னாள் அவைத் தலைவர்கள் ஆவுடையப்பன், அப்பாவு, முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோரும் சிறைக்குச் சென்று மார்க்கண்டேயனைச் சந்தித்தனர்.

ADVERTISEMENT

முன்னதாக சிறைவாயிலில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திமுகவினர் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share