திமுக சட்டமன்ற கட்சி தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By Kavi

திமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே என் நேரு, கொறடாவாக எ. வ. வேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share