ஒரே மேடையில் உதயநிதி – சீமான்

Published On:

| By Kavi

திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் உதயநிதியும் சீமானும் சந்தித்து கொண்டு நலம் விசாரித்து கொண்டனர்.

சென்னை திருவேற்காட்டில் திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா இன்று (ஜூலை 5) நடைபெற்றது.  இதில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

அதுபோன்று திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து பரஸ்பரமாக கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் சிரித்த முகத்துடன் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 

ADVERTISEMENT

இதேபோல கடந்த மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற இயக்குநர் கவுதமன் இல்ல திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சீமானும்  அமர்ந்து  உரையாடினர். தற்போது உதயநிதி – சீமான் சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share