தமிழகத்தில் ஆளும் தவெக, அதிமுக கட்சிகளின் ஐடி விங்குகளிடையே சமூக வலைதளங்களில் காரசாரமான மோதல் நடந்து வருகிறது.
தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான கடும் விமர்சனங்களுக்கு தவெக ஐடிவிங் பதிலடி கொடுத்தது.
தவெக ஐடி விங்: வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.
நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.
திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.
இதற்கு நேற்று இரவோடு இரவாக அதிமுக ஐடி விங் அளித்த பதில்: ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு
@EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி! இவ்வாறு அதிமுக -தவெக இடையே மோதல் நீடிக்கிறது.
