பிடிஆரின் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்ற முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடந்தது. இதற்கான அழைப்பிதழில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், மீனாட்சி அம்மன் கோயில்  கும்பாபிஷேக நிகழ்வில் அரசியல் இருப்பதாக நீதிமன்றமே தவெக அரசுக்கு குட்டு வைத்தது. 

ADVERTISEMENT

தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவரான பிடிஆர்-ன் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், பக்தர்களின் பாதுகாப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினார். 

அதைத்தொடர்ந்து நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில்,பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கவில்லை, அடிப்படை வசதிகள் இல்லை, போலீசார் கெடுபிடி, அம்மன் தரிசனத்திற்கு விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி, பாஸ் முறையாக வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

ADVERTISEMENT

இந்தநிலையில் மதுரையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வந்த முதல்வர் விஜய், அந்தநிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அரசினர் சுற்றுலா மாளிகைக்குச் சென்ற அவர், மாலை 4 மணி அளவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் புறப்பட்டார். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வாகனம் மூலம் வருகை தந்த அவருக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து கோயில் வாசலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT

மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், தமிழக முதல்வர் விஜய்க்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். அதுபோன்று முதல்வர் விஜய்யும் ருக்மணி அம்மையாருக்கு பொன்னாடை வழங்கி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். 

வெவ்வேறு அரசியல் தளங்களில் இயங்கினாலும், தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த தலைவரின் தாயாரை நேரில் சந்தித்து விஜய் ஆசீர்வாதம் பெற்றது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share