கோவை: தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும்போது மின்தடை.. மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மோதிர விநியோகம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதல்வர் விஜய் இன்று (செப்டம்பர் 28) தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் அமலுக்கு வந்தது.

அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

ஒரு சில குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்த அமைச்சர் சம்பத்குமார் , அரசு மருத்துவமனையில் இருந்து கிளம்பிச் சென்றார். அவருக்கு பின்னால் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரும் கிளம்பி சென்றார். இந்நிலையில் மற்ற குழந்தைகளுக்கு பொது சுகாதார துறை அதிகாரிகள் தங்க மோதிரத்தை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டு மருத்துவமனை இருளில் முழ்கியது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மொபைல் டார்ச் லைட் அடித்தனர். அந்த வெளிச்சத்தில் குழந்தைகளின் பெற்றோருக்கு மோதிரங்களை வழங்கினர். மின்வெட்டால் ஏற்பட்ட இருட்டில் , மொபைல் டார்ச் வெளிச்சத்தில் தங்க மோதிரத்தை பொது சுகாதார துறை அதிகாரிகள் வழங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share