தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. தவெக ‘ஜரூர்’ விநியோகம்!

Published On:

| By Mathi

Dharapuram-TVK Givt- Voters

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நடைபெறும் நிலையில் வாக்காளருக்கு தவெக வேட்பாளர் சத்தியபாமா தரப்பில் சேலை மற்றும் காமாட்சி விளக்கு வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வரும் 9-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியபாமா, திமுக வேட்பாளராக சுகன்யா, அதிமுக வேட்பாளராக பானுமதி, சிபிஐ வேட்பாளராக லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன், அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத், சிபிஎம் வேட்பாளராக சுகந்தி, நாம் தமிழர் வேட்பாளராக ஜானகி ராமன் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

இருதொகுதிகளிலும் நேற்று அக்டோபர் 4-ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இதனையடுத்து இரு தொகுதிகளிலும் முகாமிட்டிருந்த வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து நாளை வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் தாராபுரம் தொகுதி குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் மானூர் பாளையம் பகுதி பூத் 29, 30 ஆகியவற்றில் தவெக வேட்பாளர் சத்தியபாமா, வாக்காளர்களுக்கு கொடுத்தததாக கூறப்படும் சேலை, காமாட்சி விளக்கு படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பொருட்களுடன் வழங்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் “என் தொகுதி! என் மக்கள்! என் பொறுப்பு!” என்ற முழக்கத்துடன், ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share