டிஜிட்டல் திண்ணை: விஜய் ஆட்சியால் பாஜகவுக்கு ‘அந்த’ லாபம்? போட்டுடைத்த ராம் மாதவ்.. ’ஐசியூ’வில் கட்சியா? சீறிய நயினார்- கமலாலயத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Minnambalam Desk

DT- TN BJP

வைஃபை ஆன் செய்ததும், “செந்தாமரையே செந்தேன் இதழே”ன்னு ரொம்ப பழைய பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. ”செந்தாமரை செந்தேன்”.. ரூட்டே வேற மாதிரி தெரியுதே?

தாமரைதான்.. செந்தாமரைதான் ப்ரோ.. தமிழக பாஜக பற்றிதான் ப்ரோ..

ADVERTISEMENT

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனன் இருந்தப்ப இணை மேலிடப் பொறுப்பாளரா இருந்தவர்தான் சுதாகர் ரெட்டி. நாம செப்டம்பர் 21-ந் தேதி கருப்பு முருகானந்தம் பற்றி பேசுறப்ப, “கசப்புகள்’ முற்றிப் போக கருப்பு மீது ஆக்‌ஷன் எடுக்க சொல்லி 2 வருஷத்துக்கு முன்னாடியே மேலிட தலைவர்களுக்கு புகார் கொடுத்துகிட்டே இருந்தார் திவ்யா. இப்படி புகார் கொடுத்தும் எதுவுமே நடக்கலை… இதனால ரொம்பவே வெறுத்துப் போன திவ்யா, “நீங்க இப்படி நடவடிக்கை எடுக்காம இருந்தால் எனக்கும் டெல்லி பொறுப்புக்குமான உறவையும் பகிரங்கப்படுத்துவேன்.. எல்லா ஆதாரமும் இருக்குது”ன்னு குண்டை வீசிட்டார்”ன்னு சொல்லி இருந்தோம் இல்லையா?

அதுக்கு பிறகு 2 நாட்களிலேயே சுதாகர் ரெட்டியை அந்த பொறுப்பில் இருந்து டெல்லி மேலிடமே தூக்கிடுச்சு.. தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ், இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா, டி.கே. அருணாவை நியமிச்சுட்டாங்க..

ADVERTISEMENT

இதுக்கு அப்புறமா நேத்து ராம் மாதவ், சுரானா, அருணா டீம் சென்னைக்கு முதல் முறையா வந்தது.. வழக்கம் போல பாஜக ‘தலை’கள் பரிவாரங்களுடன் அமர்க்களமா வரவேற்பு கொடுத்தாங்க..

இன்னைக்கு பாஜக ஆபீசான கமலாலயத்துல மூவரும் கலந்துகிட்ட மீட்டிங் நடந்துச்சு.. இந்த மீட்டிங்கில எலக்‌ஷன் தோல்வி, விஜய் கவர்மெண்ட் பத்தி நிறைய டிஸ்கஷன் நடந்தது. ராம் மாதவ் பேசுனதை வானதி சீனிவாசன்தான் தமிழில்ல மொழி பெயர்த்து பேசுனாங்க..

ADVERTISEMENT

இன்னைக்கு கூட்டத்துல என்ன நடந்ததுன்னு பாஜக மூத்த தலைவர்கள்கிட்ட பேசுனப்ப, “முதல்ல பிரதமர் மோடி, முதல் முறையாக குஜராத் பிரதமரானது 2001-ம் வருஷம் அக்டோபர் 7-ல். இந்த வருஷம் அக்டோபர் 7 அதாவது நாளை மறுநாள் வந்தா மொத்தம் 25 வருஷமாகுது.. இதை கொண்டாட சேவா சங்கல்ப் அபியான் அப்படிங்கிற பேருல எங்க கட்சி கடந்த 1 மாசமா நிகழ்ச்சிகளை நடத்துது.. ஜன்மபூமி வாட்நகர் முதல் கர்மபூமி காசி வரைன்னு மோட்டார் சைக்கிள் யாத்திரை; சேவா ஜோதி கலச யாத்திரை-ன்னு பல நிகழ்ச்சிகள் நடந்துகிட்டு..

தமிழ்நாட்டிலேயும் நாளை மறுநாள் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் மோடியின் 25 வருஷ சேவையை கொண்டாடுகிற நிகழ்ச்சியை எப்படி எல்லாம் சிறப்பா நடத்தனும்னு ராம் மாதவ் ஆலோசனை கொடுத்தாரு..

அப்படியே தமிழ்நாட்டு பாலிட்டிக்ஸ் பற்றி பேச்சு வந்தது. ராம் மாதவ் பேசுறப்ப, “விஜய் ஆட்சிக்கு வந்தது நல்லதா போச்சு.. தமிழ்நட்டுல அசைக்க முடியாத சக்தி நாங்கதான்னு திமுக சொல்லிகிட்டு இருந்துச்சு.. இன்னைக்கு விஜய் அந்த திமுகவை காலி செஞ்சுட்டாரு.. இது சந்தோஷம்தான்.. விஜய் ஆட்சிக்கு வந்ததுல நமக்கு இன்னொரு நல்லதும் இருக்கு.. இப்ப அவரு கிறிஸ்டியன் அப்படிங்கிற லைனில் போய்கிட்டு இருக்கிறார்.. அப்படி விஜய் செஞ்சுகிட்டு இருந்தா நாம ‘இந்து’க்கள் ஓட்டுகளை ஈஸியா ஒருங்கிணைக்க முடியும்.. நமக்கு இது நல்ல வாய்ப்புதான்”ன்னு சொன்னார்.

அப்புறமா, “தமிழ்நாட்டுல நாம இழக்கிறதுக்கு எதுவுமே இல்லை..இனிமேல்தான் நாம கட்சியை பில்டப் பண்ணி கொண்டு போகனும்”னும் ராம் மாதவ் சொன்னார்.

இணை மேலிடப் பொறுப்பாளர் சுரானா பேசுறப்ப, “தமிழ்நாட்டுல மோடிஜிக்கு ஆதரவு நிறையவே இருக்குது.. ஆனா நாமதான் எலக்‌ஷன்ல ஜெயிப்போம் அப்படிங்கிற நம்பிக்கை மக்களுக்கு வரலை.. அதனாலதான் நமக்கு ஓட்டு கிடைக்கலை”ன்னு சொன்னார்.

இந்த கூட்டத்துல எஸ்.ஆர். சேகர் பேசுறப்ப, “தமிழ்நாட்டு பாஜக ஐசியூவில இருக்குதுங்க”ன்னு பொங்கிட்டார். ஆனா நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு, ”அப்படி எல்லாம் ஐசியூவில் கட்சி இருக்குதுன்னு ஏன் சொல்றீங்க? நம்மளோட பொசிஷனை இன்னும் ஸ்டிராங் பண்ணிக்கனும்னு சொல்லுங்க” என கோபப்பட்டார். இன்னைக்கு கூட்டத்துல பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றாரு.. அதை பத்தியும் பேசுனோம்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

விஜய் சிஎம் ஆனதுக்கு பிறகு மோடி முதல் முறையா தமிழ்நாட்டுக்கு வர்றாரு இல்லையா ப்ரோ?

ஆமாங்க ப்ரோ.. பிரதமர் மோடி 11-ம் தேதி பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறாரு.. பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்; சென்னை ஐஐடி நிகழ்ச்சி; இளையராஜா இசை மையம் திறப்பு; ரோடு ஷோன்னு நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் ஜோரா ஏற்பாடுகள் நடக்குது..

விஜய் முதல்வரான பிறகு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வரும் மோடி, மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் கலந்துக்கிறாரு.. விஜய்யும் மோடியும் ஒரே மேடையில் பங்கேற்க இருக்காங்க.. அப்படியே மெட்ரோ ரயிலில் ரைடும் போறாங்க ப்ரோ… அவங்க ரெண்டு பேரும் அங்கிட்டு ரைடு போக.. இங்கிட்டு திமுகவும் கம்யூனிஸ்டுகளும் ரெண்டு பேரையும் சேர்த்து ‘ரைடு’ விட ரெடியாகிட்டு இருக்காங்களாம் ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share