வைஃபை ஆன் செய்ததும், ”தோஸ்த் தோஸ்த் நா ரஹா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. 60’ஸ் இந்தி பாட்டை இறக்கிட்டீங்க..
நட்புக்கு துரோகம் செஞ்சவங்களை பத்தின பாட்டாம் ப்ரோ.. ஹம்மிங் நல்லா இருக்கும் ப்ரோ.. இப்ப நான் சொல்றதும் கூட இதே மாதிரியான விவகாரம்தான்..

தமிழக பாஜகவில் கருப்பு முருகானந்தத்தின் பொதுச்செயலாளர் பதவியை பறிச்சுட்டாங்க இல்லையா?.. என்ன காரணத்துக்காகன்னு வெளிப்படையாக சொல்லாமலேயே, கருப்பு முருகானந்தம் பதவி பறிக்கப்பட்டதுன்னு நயினார் நாகேந்திரன் அறிவிச்சிருந்தார்.
அதுக்கு பிறகுதான், பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளரான திவ்யா சேஷாத்ரி, கருப்பு முருகானந்தம் மீது புகார் கொடுத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதவாவது, கருப்பு முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனக்கும் தனது குழந்தைக்கும் கொலை மிரட்டல் விடுவதாகவும் திவ்யா சேஷாத்ரி புகார் கொடுத்திருத்தாங்க.. அதனடிப்படையிலதான் கருப்பு முருகானந்தம் பதவி பறிக்கப்பட்டுச்சு.. அதுக்கு பிறகு திவ்யாவின் கட்சி பதவியையும் நயினார் நாகேந்திரன் பறிச்சுட்டார்..


இதை பத்தி சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்ட கருப்பு முருகானந்தம், “ முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஏற்க முடியாது”ன்னும் சொல்லி இருந்தார்.
யார் இந்த திவ்யா சேஷாத்ரி? அவருக்கும் கருப்பு முருகானந்தத்துக்கும் என்ன பிரச்சனைன்னு நாம பாஜக தரப்புல விசாரிச்சப்ப ’ஏ’கப்பட்ட தகவல்களை கொட்டிட்டாங்க.. நம்மிடம் பேசிய பாஜக சோர்ஸ், “திவ்யா சேஷாத்ரியின் பூர்வீகம் பெங்களூரு. விவகாரத்து பெற்ற பெண். இவர் முதலில் அடைக்கலம் ஆனது தமிழ்நாட்டை கவனிக்கும் ‘டெல்லி’ பொறுப்பாளரிடம்தான்.. அவரும் ’திராவிட’ மாநிலம்தான்.
திவ்யா சேஷாத்ரிக்கு பாதுகாப்பு கொடுக்க நினைத்த அந்த பொறுப்பாளர், கருப்பு முருகானந்தத்திடம் ’பொறுப்பை’ கொடுத்திருக்கிறார்.. மேலிடம் சொன்னதால கருப்புவும் ஸ்ரீரங்கத்துல ஒரு வீட்டுல திவ்யாவை தங்க வைச்சிருந்தார்.. அதுல திவ்யாவுக்கும் கருப்பு முருகானந்தத்துக்கும் ‘பழக்கம்’ ஆகிடுச்சு.
பெங்களூருவில் திவ்யா பேரில் 2 கிரவுண்ட் நிலம் டிஸ்பியூட்ல இருக்குது. அந்த டிஸ்பியூட்டை முடிச்சு தர 2 கிரவுண்ட் நிலத்தை தன் பேருக்கு மாத்த சொல்லி கருப்பு முருகானந்தம் கேட்க, திவ்யா மறுக்க பிரச்சனையாகிடுச்சு..
இந்த ‘கசப்புகள்’ முற்றிப் போக கருப்பு மீது ஆக்ஷன் எடுக்க சொல்லி 2 வருஷத்துக்கு முன்னாடியே மேலிட தலைவர்களுக்கு புகார் கொடுத்துகிட்டே இருந்தார் திவ்யா. இப்படி புகார் கொடுத்தும் எதுவுமே நடக்கலை… இதனால ரொம்பவே வெறுத்துப் போன திவ்யா, “நீங்க இப்படி நடவடிக்கை எடுக்காம இருந்தால் எனக்கும் டெல்லி பொறுப்புக்குமான உறவையும் பகிரங்கப்படுத்துவேன்.. எல்லா ஆதாரமும் இருக்குது”ன்னு குண்டை வீசிட்டார்..
இதனால ரொம்பவே அதிர்ச்சியான எங்க தலைவர்கள் வேறவழியே இல்லாமல் இப்ப கருப்பு முருகானந்தம் மீது ஆக்ஷன் எடுத்திருக்காங்க.. திவ்யா கட்சி பதவியையும் பறிச்சுட்டாங்க..”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
