தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அதிரடி மாற்றம்- பின்னணியில் கருப்பு முருகானந்தம் ‘கேஸ்’?

Published On:

| By Mathi

sudhakar reddy-TN BJP

தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக நீண்டகாலம் இருந்து வந்தவர் சுதாகர் ரெட்டி. தற்போது தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ், இணை பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா, மற்றொரு இணை பொறுப்பாளராக டி.கே. அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

சுதாகர் ரெட்டி அதிரடி மாற்றம்- பின்னனி

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த செப்டம்பர் 21-ந் தேதி, “டிஜிட்டல் திண்ணை: பாஜக கருப்பு முருகானந்தம் பதவி பறிப்பின் பின்னணி… திவ்யா போட்ட ‘டெல்லி’ குண்டு!” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “கருப்பு முருகானந்தம் மீது புகார் தெரிவித்த திவ்யா சேஷாத்ரியின் பூர்வீகம் பெங்களூரு. விவகாரத்து பெற்ற பெண். இவர் முதலில் அடைக்கலம் ஆனது தமிழ்நாட்டை கவனிக்கும் ‘டெல்லி’ பொறுப்பாளரிடம்தான்.. அவரும் ’திராவிட’ மாநிலம்தான். திவ்யா சேஷாத்ரிக்கு பாதுகாப்பு கொடுக்க நினைத்த அந்த பொறுப்பாளர், கருப்பு முருகானந்தத்திடம் ’பொறுப்பை’ கொடுத்திருக்கிறார்.. மேலிடம் சொன்னதால கருப்புவும் ஸ்ரீரங்கத்துல ஒரு வீட்டுல திவ்யாவை தங்க வைச்சிருந்தார்.. அதுல திவ்யாவுக்கும் கருப்பு முருகானந்தத்துக்கும் ‘பழக்கம்’ ஆகிடுச்சு.

ADVERTISEMENT

பெங்களூருவில் திவ்யா பேரில் 2 கிரவுண்ட் நிலம் டிஸ்பியூட்ல இருக்குது. அந்த டிஸ்பியூட்டை முடிச்சு தர 2 கிரவுண்ட் நிலத்தை தன் பேருக்கு மாத்த சொல்லி கருப்பு முருகானந்தம் கேட்க, திவ்யா மறுக்க பிரச்சனையாகிடுச்சு..

இந்த ‘கசப்புகள்’ முற்றிப் போக கருப்பு மீது ஆக்‌ஷன் எடுக்க சொல்லி 2 வருஷத்துக்கு முன்னாடியே மேலிட தலைவர்களுக்கு புகார் கொடுத்துகிட்டே இருந்தார் திவ்யா. இப்படி புகார் கொடுத்தும் எதுவுமே நடக்கலை… இதனால ரொம்பவே வெறுத்துப் போன திவ்யா, “நீங்க இப்படி நடவடிக்கை எடுக்காம இருந்தால் எனக்கும் டெல்லி பொறுப்புக்குமான உறவையும் பகிரங்கப்படுத்துவேன்.. எல்லா ஆதாரமும் இருக்குது”ன்னு குண்டை வீசிட்டார்..”ன்னு பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதவியில் இருந்து சுதாகர் ரெட்டி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share