யூனிபார்மில் வந்த தவெக பெண் எம்.எல்.ஏக்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கும் இன்று (செப்டம்பர் 7) தமிழக வெற்றி கழக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நிறத்தில் புடவை அணிந்து வந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

தமிழகச் சட்டப்பேரவை, 3 நாட்கள் அரசு விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடியுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த 3-ஆம் தேதி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர். அதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விவாதத்திற்குப் பதிலளித்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று சட்டமன்றத்திற்கு வந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பெண் எம்.எல்.ஏக்கள் ஒரே நிறத்தில் புடவை அணிந்து வந்துள்ளனர். பொதுவாகச் சட்டமன்றத்திற்கு வரும் ஆண் எம்எல்ஏக்கள் வெள்ளை நிற உடையில் வருவது வழக்கம். இந்நிலையில், தவெக பெண் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை போன்று ஒரே நிறத்தில் புடவை அணிந்து வந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், சட்டமன்ற விவாதங்களின் போது பெரும்பாலும் பேண்ட், சட்டையில் வந்த முதல்வர் ஜோசப் விஜய், இன்று பதிலுரை அளிக்க கோட், சூட்டில் வந்துள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share