தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டங்களில் மின்வெட்டு!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டங்களில் மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சென்னியப்பன் நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பர்வேஸ், பிரபு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. முன்னதாக செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதேபோல மதுராந்தகத்தில் தொகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. “உடனடியாக ஜெனரேட்டரைப் போடுங்கள்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அப்போது ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் ஆதவ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

தமிழகத்தில் மின்வெட்டு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களிலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share