டிஜிட்டல் திண்ணை: கலங்கும் தவெக.. சிவி சண்முகத்துடன் ’புஸ்ஸி’ பேச்சு.. ’செலவு’க்கு திணறும் உடன்பிறப்புகள்- போராடும் அதிமுக! பாமக ஓட்டு யாருக்கு? திக்.. திக்..தேர்தல் களம்!

Published On:

| By Minnambalam Desk

Tamil Nadu Bypolls-Digital Thinnai

வைஃபை ஆன் செய்ததும், “ஏய் நமக்கான காலம்.. ஏய் நெருப்பான வேகம்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. செம்ம ஃபார்மில் இருக்கிறீங்க போல

அப்படிங்களா ப்ரோ.. நமக்கு தெரிஞ்சது எல்லாம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம்தான் அனல் பறக்குதுங்க ப்ரோ..

ADVERTISEMENT

மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலுமே பம்பரமாக சுழன்று சுழன்று திமுகவினர் வேலை செய்யுறாங்க.. பிற மாவட்டங்களில் இருந்து குவிக்கப்பட்ட நிர்வாகிகளும் வீடு வீடா ஓட்டு கேட்டு பிரசாரம் செஞ்சுட்டு இருக்காங்க..

திமுக கூட்டணின்னு பார்த்தால் தேமுதிக, மநீம, கொமதேக மட்டும்தான் இருக்குது.. 2 தொகுதி இடைத்தேர்தலில் பாமக ஆதரவை கேட்டு அன்புமணிகிட்ட ஸ்டாலினே பேசியிருந்தார்.. இதைத்தான் நாமும் திமுக- பாமக கூட்டணின்னு கூட பேசியிருந்தோம். அப்ப, ”ஏற்கனவே பாமக யாருக்கும் ஆதரவு இல்லைன்னு அறிவிச்சுருக்கு.. அதனால அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிட்டு இப்ப திமுகவுக்கு ஆதரவுன்னு அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறதா? ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு அப்படியே இருக்க, கிரவுண்ட்ல திமுக வேட்பாளருக்கு ஓட்டு போடனும்னு பாமகவினருக்கு சொன்னால் போதுமா?”ன்னு டிஸ்கஷன் நடக்குதான்னும் சொல்லி இருந்தோம்.. இப்ப கூட்டணி கட்சியான தேமுதிகவையும் திமுக களத்துல இறக்கிவிட்டுருக்கு..

ADVERTISEMENT

திமுக சீனியர்கள்கிட்ட நாம பேசுனப்ப, ”கூட்டணி பலம் இல்லாத நிலைமையிலும் நாங்க முழு வீச்சுலதான் வேலை செஞ்சுகிட்டு இருக்கிறோம்.. எப்படியாவது ஜெயிச்சுடனும்னுதான் நாங்க போராடுகிறோம் ”ன்னு சொல்றாங்க ப்ரோ..

தேர்தல் களத்துல வேலை செஞ்சுகிட்டு இருக்கிற திமுக நிர்வாகிகள் சிலர்கிட்ட நாம பேசுனப்ப, “எங்களைப் பொறுத்தவரை இது தன்மானப் பிரச்சனையாக நாங்க பார்க்கிறோம்.. எங்க தலைமையும் அப்படித்தான் பார்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இளைஞரணி பட்டாளத்தையே களமிறக்கிவிட்டிருக்கிறார்… நாங்களும் தலைமை உத்தரவுப்படி கடுமையாக உழைச்சுகிட்டுதான் இருக்கிறோம்”ன்னு சொல்றாங்க

ADVERTISEMENT

இன்னும் சில திமுக நிர்வாகிகள், “நாங்க ரொம்ப வேகமாகத்தான் வேலை செய்யுறோம்… ஆனா செலவுக்கான பணம்தான் வரலை.. நாங்க இப்பவரைக்கும் சொந்த காசை போட்டு செலவு செய்யறோம்.. இந்த மாதிரி முக்கியமான தேர்தல் களத்துல செலவுகளையும் கட்சி பார்த்துகிட்டாதான் எங்களுக்கும் பூஸ்ட்டா இருக்கும்”ன்னு ஆதங்கப்படவும் செய்யுறாங்க..

ஆனா கிரவுண்ட்ல நாம பார்க்கும் போது, மதுராந்தகம் -தாராபுரம் 2 தொகுதிகள் களத்திலும் பாமக நிர்வாகிகள் கண்ணிலே படலை.. இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “எந்த தொகுதியிலுமே பாமக நிர்வாகிகள்கிட்ட இதுவரைக்கும் திமுக நிர்வாகிகள் யாரும் கலந்து பேசவும் இல்லை.. பாமக நிர்வாகிகள் செலவுக்கு காசு கொடுத்து வந்து எலக்‌ஷன் வேலையை பாருங்கன்னு பார்மலா கூப்பிடவும் இல்லை.. அன்புமணிகிட்ட ஸ்டாலின் பேசியிருக்காருன்னு சொல்றாங்க.. அந்த அளவுக்கு அதாவது தலைமை அளவுக்குதான் இருக்குதே தவிர களத்துல அப்படி எதுவும் இல்லைதான்” அப்படின்னு சொல்றாங்க..

பாமக நிர்வாகிகள்கிட்ட நாம பேசுனப்ப, “எங்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தது அதிமுக.. அதனால போன தேர்தலில் இந்த 2 தொகுதிகளிலும் அதிமுகவை நாங்க ஜெயிக்கவும் வைச்சோம்..

மதுராந்தகத்துல அதிமுக ஜெயிச்சதுல எங்க ஓட்டுகள்தான் ரொம்ப முக்கியமாகவும் இருந்துச்சு அப்படிங்கிறதை சிவி சண்முகம் மாதிரி அதிமுக தலைவர்களே சொல்லி இருக்காங்க.. ஆனா இப்ப எங்க தலைவர் தேர்தல் புறக்கணிப்புன்னு அறிவிச்சுட்டாரு.. அதைத்தாண்டி அவர்கிட்ட இருந்து எங்களுக்கு எந்த இன்ஸ்ட்ரக்‌ஷனும் வரலை.. அதனால தலைவர் அன்புமணி சொல்றபடியே நடப்போம்.. இப்போதைக்கு நாங்க அதிமுகவுடன் இணைந்து வேலை செஞ்சுகிட்டு இருக்கிறோம்”ன்னு சொல்றாங்க ப்ரோ.

சரிங்க ப்ரோ.. அதிமுக எப்படி ஒர்க் பண்ணிகிட்டு இருக்காங்க?

மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளுமே அதிமுக ஜெயிச்ச தொகுதிதான்.. ஏற்கனவே ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்தான் இந்த முறை தவெக வேட்பாளர்களாக இருக்கிறாங்க.. சில இடங்களில் இந்த வேட்பாளர்கள் வரும் போது அதிமுகவினர், ”துரோகம் செஞ்சுட்டு போயிட்டீங்களே”ன்னு கோபத்தை காட்டுறாங்க.. வாக்குவாதம் செய்யுறாங்க.. என்னதான் அதிமுக ஜெயிச்ச தொகுதியாக இருந்தாலும் இந்த முறை நாங்க ஜெயிக்கிறமோ இல்லையோ.. தவெக வேட்பாளர்களை ஜெயிக்க விடமாட்டோம் அப்படிங்கிற வெறித்தனத்துல அதிமுகவினர் இருக்கிறாங்க.. பாமக ஓட்டு கிடைக்கும்; நிச்சயம் ஜெயிப்போம்ன்னு நம்புறாங்க.. அதே நேரத்துல தலைமையில இருந்து.. எடப்பாடி பழனிசாமி தொடங்கி.. மூத்த தலைவர்கள்கிட்ட இருந்து அதிமுகவினருக்கு வேகம் தரக் கூடிய நம்பிக்கையான வார்த்தைகளும் வரலை.. செலவுக்கான பணமும் வரலையேங்கிற தவிப்பும் இருக்குதுங்க ப்ரோ.

ஓஹோ.. ஆளும் தவெக அமர்க்களப்படுத்துறாங்களா?

ஆமாங்க ப்ரோ.. நாம மதுராந்தகம் தொகுயில விசிட் அடிச்சப்ப பார்த்ததுல, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், பணத்தை தண்ணியா செலவு செஞ்சுகிட்டு இருக்காங்க.. ஆரத்தி தொடங்கி அத்தனைக்கும் தாராளமாக பணத்தை வாரி கொடுக்கிறாங்க.. வீக்கான ஏரியாவாக இருந்தா கூடுதலா கவனிக்கிறாங்க.. இந்த தொகுதியில அதிகமாக செலவு செய்யுற வேட்பாளர்னா மரகதம் குமரவேல்தான்.. அப்படி இருக்கும் போது தவெகவினரிடமும் உற்சாகமும் கரை புரண்டு ஓடுது.. விஜய் பிரசாரத்துக்கு வரும் போது இந்த உற்சாகம் பீக்ல இருக்கும் ப்ரோ..

அதே நேரத்துல தவெக அமைச்சர்கள்கிட்ட இந்த உற்சாகம் குறைவாகத்தான் இருக்கு.. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களுக்கு ரொம்பவே அச்சம் இருக்கிறதாம்.. இடைத்தேர்தல்களில் ஜெயிக்க சான்ஸ் இருக்கான்னு ரொம்பவே திகிலடிச்சு போயும் இருக்காங்களாம்..

இதை பத்தி தவெக அமைச்சர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசுனப்ப, “தொகுதிகளில் இருந்து கிடைக்கும் தகவல்களை வெச்சு, ”2 தொகுதிகளிலுமே ஈஸியா ஜெயிக்கலாம்னு நினைச்சோம்.. ஆனா ரொம்பவே சவாலா இருக்குதே”ன்னு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சக அமைச்சர்கள்கிட்ட ரொம்பவே கவலையா சொல்லிகிட்டு இருக்கிறார்.

மதுராந்தகம் தொகுதியில புஸ்ஸி ஆனந்த் பிரசாரத்துக்கு போனப்ப, அதிமுகவினர் ரொம்பவே எதிர்ப்பு தெரிவிச்சாங்க.. அப்பவே புஸ்ஸிக்கு ரொம்ப ஷாக்.. தாராபுரத்துலேயும் போற இடத்துல எல்லாம் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிச்சு சோசியல் மீடியாவில வைரலாக்கிவிடுறாங்க.. இது ஏதோ அதிமுககாரங்க செய்யுறாங்கன்னு மட்டுமே நாங்க பார்க்கலை.. இது மக்கள்கிட்டேயும் ரீச் ஆகும் போது எங்களுக்கு நெருக்கடியாகிடுது..

சரி.. அதுக்காக புஸ்ஸி ஆனந்த் கவலைப்பட்டுகிட்டும் இருக்கலை.. 2 தொகுதிகளிலும் ஜெயிக்க என்ன என்ன செய்யனுமோ அத்தனையையும் செஞ்சுகிட்டுதான் இருக்கார்.. 2 தொகுதிகளில் குறிப்பாக மதுராந்தகத்துல அதிமுக ஜெயிக்க பாமகதான் காரணம் அப்படிங்கிறது எல்லாருக்கும் தெரியும்.. அதனால பாமக வாக்குகளை எப்படியாவது தவெக பக்கம் கொண்டு வந்துடனும்னு புஸ்ஸி ஆனந்த் ரொம்பவே முயற்சி செஞ்சார்.. அன்புமணிகிட்ட ஜான் ஆரோக்கியசாமியும் பேசுகிட்டுதான் இருந்தார்..

ஆனா அன்புமணிகிட்ட ஸ்டாலின் பேச அன்புமணியும் பாசிட்டிவ்வா பதில் சொல்லிட்டாருன்னு புஸ்ஸிக்கு தகவல் வந்தது.. இதுல அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ரொம்பவே அப்செட் ஆகிட்டாரு..

அதனால அடுத்ததாக, அதிமுக வாக்குகளை எப்படியாவது வாங்க முடியுமான்னு அடுத்த ஸ்கெட்ச் போட்டார்.. அதனால முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை தொடர்பு கொண்டும் பேசுனார். அப்ப, “ஏன் ஒதுங்கி இருக்கிறீங்க? வாங்க. . எலக்‌ஷன்ல இறங்கி வேலை பாருங்க..நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தர்றோம்”ன்னு ரொம்பவே உரிமையோடு புஸ்ஸி பேசினார்.

அப்ப, “எஸ்பி வேலுமணி மேல இருக்கிற கேஸ் ரொம்பவே சீரியஸாகிட்டு இருக்கு.. இந்த கேஸில் எஸ்பி வேலுமணி கைதாகி ஜெயிலுக்கு போகவும் சான்ஸ் இருக்கு. அதனால நீங்க வாங்க. .நாம பேசுவோம்”ன்னும் புஸ்ஸி சொல்லியும் பார்த்தார்.

ஆனால் சிவி சண்முகமோ டென்ஷனாகவே புஸ்ஸியிடம் பேசினார். சிவிஎஸ் பேசுறப்ப, “விஜய் எங்க ஆபீஸுக்கு வந்து எங்களை எல்லாம் பார்த்தாரு.. நீங்களும் 5 அமைசர் பதவிக்கு ஓகே சொல்லி இருந்தீங்க.. இதை எல்லாம் நம்பி நாங்க சட்டசபையில நம்பிக்கை வாக்கெடுப்பில உங்களை ஆதரிச்சோம்.. நீங்களும் ஜெயிச்சுட்டீங்க.. ஆனா நீங்க எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடந்துகிட்டீங்களா? இல்லையே.. எங்க போனை கூட யாருமே அட்டெண்ட் பண்ணலையே.. எங்ககிட்ட பேசிகிட்டு இருந்த நீங்களும் போனை எடுக்கலை.. ஜெகதீசனும் எடுக்கலை.. அந்த 10 நாட்கள் நாங்க அடிச்ச எந்த போன் காலையுமே நீங்க அட்டெண்ட் பண்ணவே இல்லையே.. எங்க ஆதரவு வேணும்னு ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட எல்லாரும் முதல்ல பேசுனாங்க.. ஆனா எங்களையே வேணாம்னு நீங்களே ஒதுக்கிட்டீங்க..

அதனால மறுபடியும் நீங்க சொல்றதை எல்லாம் நம்பி எதுவும் செய்ய முடியாது.. நாங்க விஜய்கிட்ட நேரடியா பேசனும்.. ஏன் இதை அழுத்தமா சொல்றேன்னா, நான் உங்ககிட்ட எது கேட்டாலும் ஆதவ் அப்படி செய்யுறாருன்னு சொல்றீங்க.. ஆதவ்கிட்ட கேட்டா உங்களை காட்டுறார்.. எதுக்கு வம்பு? நாங்க விஜய்கிட்டேயே நேரில் பேசுகிறோம். அதனால விஜய்யை மறுபடியும் சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க.. அவர் எங்களை அழைச்சா நாங்க பேசுறோம்.. அப்படி சந்திச்சு பேசும்போது சில முடிவுகளை உங்க சைடுல எடுத்தாதான் நாங்களும் தெளிவாக முடிவெடுக்க முடியும்”ன்னு கொட்டித் தீர்த்துவிட்டார்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

புஸ்ஸி ஆனந்த் இப்படி அதிமுக ஓட்டுகளுக்கு குறி வெச்சா, ஆதவ் அர்ஜூனாவோ வெளிப்படையாகவே அதிமுகவும் தவெகவும் ஒன்னுதான்.. அதிமுக ஓட்டும் தவெக ஓட்டும் ஒன்னுதான்னு பிரசாரம் செஞ்சுகிட்டு இருக்கிறார்”ன்னு சொல்றாங்க ப்ரோ.

இப்போதைக்கு 2 தொகுதிகளிலும் 3 கட்சி தொண்டர்களும் ரொம்பவே நம்பிக்கையோடு, “நாங்கதான் ஜெயிப்போம்”ன்னு இருக்காங்க.. ஆனா 3 கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள்கிட்ட, “நிச்சயம் ஜெயிச்சுடுவோமா?” “நமக்கு 2-வது இடமாவது கிடைச்சுடுமா?” “3-வது இடத்துக்கு போறதுக்கும் வாய்ப்பிருக்கிறதா?”ன்னு திக் திக் மனநிலைதான் இருக்குதுங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share