RTI சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தகவல்களை பெற விலக்கு அளித்த அரசாணையை, அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநில அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொதுத் துறையின் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கீழ் வரும் தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act, 2005) வரம்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக, தவெக அரசின் இந்த நடவடிக்கைக்குக் விஜய் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை RTI சட்டத்தின் கீழ் பெறுவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு உத்தரவைத் திரும்பப் பெறுவதாகத் தவெக அரசு அறிவித்துள்ளது.
