2029-ல் தவெக தனித்து போட்டி- விஜய் பிரதமர்.. ’ஆஸ்தான’ ஜோதிடர் கணிப்பு

Published On:

| By Mathi

TVK Will Contest Alone, No Alliance in 2029: Vijay Will Become PM- Astrologer's Prediction

2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் 60 எம்.பி.க்கள் இடங்களைக் கைப்பற்றும்; முதல்வர் விஜய், நாட்டின் பிரதமராக உருவெடுப்பார் என்று விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் கணித்துள்ளார்.

தவெகவினர் நடத்தி வரும் ‘வெற்றி’ டிவி சேனலுக்கு அதன் நிர்வாகி சிங்காரவடிவேலன் அளித்த பேட்டி: 2029-ல மத்தியில் அமையப்போற ஆட்சியில தவெக முக்கிய பங்கு வகிக்கும். விஜய் சார்தான் பிரதமர் என்பதை விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தீர்மானித்துவிட்டார், கணக்கு பண்ணிட்டார். பேப்பர்ல கால்குலேஷன் போட்டு வச்சிருக்கிறார். எனக்கு ஆச்சரியமா இருக்கு.

ADVERTISEMENT

நீங்க தமிழ்நாடு அப்படிங்கிற ஒரு சின்ன மாநிலத்துக்குள்ள தவெகவை சுருக்குறீங்க. அது கிடையாது. தென்னிந்தியா முழுவதும் தவெக வலுப்பெறும். இதை நம்ம… இவரு ஜோதிடர் பண்டிட்ஜி வந்து ஏற்கனவே தெளிவா குறிச்சிட்டார்.

இப்போ உதாரணத்துக்கு ஒரு சின்ன கால்குலேஷன் சொல்றேன். ‘லியோ’ படம் தமிழ்நாட்டுல 80-லிருந்து 90 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணுது. கேரளாவுல டிக்கெட் ரேட்டே 100 ரூபாதான். 23 கோடி ரூபாய் லியோ ஷேர் . அப்போ என்ன அர்த்தம்னா, தமிழகத்தில் உள்ள ஆடியன்ஸ்ல 50% கேரளாவுல இருக்காங்க. கேரளா சின்ன மாநிலம். அங்க 50% ஆடியன்ஸ் இருக்காங்க இவங்களுக்கு. தமிழ்நாட்டுல உள்ள அளவுக்கு… அப்போ ஒரு பெரிய ஆடியன்ஸ் அவருக்கு இருக்காங்க.

ADVERTISEMENT

அதனால தவெகவை இப்பவே வந்து அங்கேயே ஆரம்பிச்சுட்டு இருக்காங்க கேரளாவில். இன்னும் அது வந்து முழுமை பெறவில்லை. இவங்களே ஒரு மாநில அமைப்பாளர் எல்லாம் போட்டு ப்ராப்பரா பண்ணுவாங்க. 2028 ஜனவரிக்கு பிறகு அது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுக்கும்.. கேரளாவில் தவெக மிகப்பெரிய கட்சியாக வரும். கர்நாடகாவில் பண்ண போறாங்க. ஆந்திராவில் பண்ண போறாங்க, தெலுங்கானாவில் பண்ண போறாங்க.

இந்த எல்லா இடத்திலுமே தவெக போட்டியிடும். தவெக உறுதியாக 60 இடங்களை வெல்லும்னு பண்டிட்ஜி கணிக்கிறார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கூட்டணியில காங்கிரஸ் இருக்காங்க, கம்யூனிஸ்ட் இருக்காங்க. காங்கிரஸ் ஏற்கனவே திமுகவுல 10 சீட்டு வாங்கி நின்னது. 2 கம்யூனிஸ்டும், முஸ்லீம் லீக்கும், விடுதலைச் சிறுத்தைகளும் ஆளுக்கு 2 சீட் வாங்குனாங்க. இவங்களே 18 ஆயிடுச்சு. இவங்க திமுகவுலயும் அதிகமான சீட்டை கேட்டு இவ்வளவு சீட்டை வாங்கி நின்னு ஜெயிச்சிருக்காங்க. இங்க தவெக கூட்டணியிலும் அதிக இடம் கேட்பாங்க..

நம்ம கேட்கிறதைக் கொடுக்கணும்னு 20 எம்பி சீட்டு கேட்கும் காங்கிரஸ். 15-ஆவது வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும். ஏற்கனவே திமுக கூட்டணியில் 2 சீட் வாங்குனோம்.. எங்களுக்கு 3 சீட்டுன்னு விடாப்பிடியா நிப்பாங்க. 4 கட்சிகளுக்கு 3 கொடுத்தீங்கன்னா 12 சீட் ஆச்சு. காங்கிரஸுக்கு 15 கொடுத்தீங்கன்னா 27 சீட் ஆச்சு. மீதி எத்தனை இடத்துல தவெக நிற்கும்?

அப்போ பண்டிட்ஜியுடைய விஷன் என்ன அப்படின்னா, அவர் வந்து போய் யார்கிட்டேயும் அட்வைஸ் பண்ணல. கூட்டணியைச் சிதைக்கிறதுக்காக நான் சொல்லல. அவருடைய விஷன்… அவர் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய மைண்ட்ல என்ன வருது? நாளைக்கு நடக்கப் போறதை சொல்றார்.

2029 தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும். 40-க்கு 40 தமிழ்நாட்டில் அடிக்கும்.

கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் தவெகவுக்கு 60 இடங்கள் கிடைக்கும்.

தெலுங்கானாவில் இந்த முறை கவிதா உறுதியாக ஆட்சிக்கு வருவாங்கன்னு பண்டிட்ஜி குறிச்சிட்டாரு. அவங்க 10 எம்பி சீட்டைப் பிடிப்பாங்கன்னு சொல்லிட்டாரு.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியாக 10 சீட்டைப் பிடிப்பாரு.

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் 50 சீட்டைப் பிடிப்பாரு.

இதை கூட்டினா 130 சீட்டு. இவங்களது தலைவரா நம்மளுடைய தளபதி விஜய் அவர்கள் இருப்பார்.

இந்த அணிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து கூட்டணி அமைச்சரவையில் இருப்பாங்க. விஜய் அவர்கள் பிரதமராவார். இது நடக்கும். இதை பண்டிட் கணித்துவிட்டார். இதுதான் நடக்கப் போகுது. இவ்வாறு அந்த பேட்டியில் சிங்காரவடிவேலன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share