பருவமழை முன்னெச்சரிக்கை : சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள் போன்ற அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

மண்டல வாரியான பொறுப்பு அமைச்சர்களின் விவரங்கள்:

  • மண்டலம்-1 (திருவொற்றியூர்) மற்றும் மண்டலம்-2 (மணலி) – அமைச்சர் ரமேஷ் (இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை)
  • மண்டலம்-3 (மாதவரம்) மற்றும் மண்டலம்-4 (தண்டையார்பேட்டை) – அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை)
  • மண்டலம்-5 (இராயபுரம்) மற்றும் மண்டலம்-6 (திரு.வி.க. நகர்) – அமைச்சர் டாக்டர் K.G. அருண் ராஜ் (மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை)
  • மண்டலம்-7 (அம்பத்தூர்), மண்டலம்-8 (அண்ணாநகர்) மற்றும் மண்டலம்-9 (தேனாம்பேட்டை) – அமைச்சர் ம. விஜய் பாலாஜி(கைத்தறி, துணி நூல் மற்றும் காகிதத் துறை)
  • மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-11 (வளசரவாக்கம்) – அமைச்சர் டாக்டர் TK. திவ்யா (இயற்கை வளங்கள் துறை)
  • மண்டலம்-12 (ஆலந்தூர்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு) – அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத்துறை)
  • மண்டலம்-14 (பெருங்குடி) மற்றும் மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) – அமைச்சர்: க. விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)

அதே சமயம் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share