150 கி.மீ வேகத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் : அலறிய ஜிபி முத்து

Published On:

| By Selvam

டிக் டாக் புகழ் ஜிபி முத்து, டிடிஎஃப் வாசனுடன் பைக்கில் அதிவேகமாகச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவரது வீடியோக்களை பார்ப்பதற்குத் தனி ரசிகர்கள் உள்ளனர். இவரது நெல்லை மாவட்ட வட்டார வழக்குப் பேச்சை அனைவரும் ரசிக்கின்றனர். ஜிபி முத்து தனது யூடியுபில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு வரும் கடிதங்களை வாசிக்கும் வீடியோக்கள் அனைவராலும் அதிகமாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது ஜிபி முத்து கோயம்புத்தூரில் சினிமா படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.

அங்கு அவர் பைக் ரேஸர் டிடிஎஃப் வாசனை சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் பைக் சாகசங்கள் மீது ஆர்வமானவர்.

ADVERTISEMENT

இவர் தனது பைக்கில் பயணம் செய்யும் வீடியோக்களை Twin Throttlers என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன், சமீபத்தில் தனது பிறந்தநாளைத் தனது ரசிகர்களுடன் கொண்டாடினார்.

அப்போது அவருக்காகக் கூடிய கூட்டத்தைப் பார்த்து இணையம் முழுக்க ஒரு வாரம் டிடிஎஃப் வாசன் குறித்த பேச்சுக்கள் தான் அதிகமாக இருந்தன. டிடிஎஃப் வாசன் அதிவேகமாகச் செல்லக்கூடிய வீடியோக்களை சிலர் பகிர்ந்து, அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் டிடிஎஃப் வாசன், ஜிபி முத்துவுடன் சேர்ந்து பைக்கில் பயணம் செய்துள்ளார்.

இந்த வீடியோவை டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஜிபி முத்து, பைக்கில் மெதுவாகப் போகச் சொல்லியும், டிடிஎஃப் வாசன் வேகமாகச் செல்கிறார். டிடிஎஃப் வாசன் 150 கி.மீ வேகத்தில் செல்கிறார்.

இதனால் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து அலறுகிறார். “நான் இனி உங்களோடு பைக்கில் வர மாட்டேன்” என்கிறார் ஜிபி முத்து. இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதே வேளையில், சாலையில் வேகமாகச் செல்லும் டிடிஎஃப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

ஹை பசிக்கு ஏது புரட்டாசி : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share