இதெல்லாம் அசிங்கம்… நடிகை திரிஷாவின் போஸ்ட் யாருக்கு?

Published On:

| By Kavi

“இந்த வயதில் இதெல்லாம் அசிங்கம்… போய் நாலு காசு சம்பாதிச்சு அமைதியா வாழ பாருங்க” என்று நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சமீப நாட்களாக நடிகை திரிஷாவை பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

ADVERTISEMENT

நடிகை திரிஷா கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்த சூழலில் முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கேட்ட மனுவை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதேசமயம் நடிகை திரிஷாவை குறிப்பிட்டும் பல்வேறு ட்வீட்டுகளும் கமெண்ட்களும் இணையத்தில் அதிகளவு பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தனது பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை திரிஷா அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்ட கையோடு ஒரு பதிவையும் போட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதாவது, “இந்த வயதில் இந்த டிராமா எல்லாம் அசிங்கம்… போய் நாலு காசு சம்பாதிச்சு அமைதியா வாழ பாருங்க” என்று பதிவிட்டுள்ளார்.

திரிஷாவின் இந்த மறைமுக பதிவு யாருக்கு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே நடிகை குட்டி பத்மினி, முதல்வர் விஜய் அவரது மனைவி சங்கீதா மற்றும் திரிஷா பற்றி வாவ் தமிழா சேனலுக்கு ஒரு பேட்டியளித்து இருந்தார்.

அதில், “ஒரு காலத்தில் விஜய், திரிஷா இருவருக்கும் இடையே நல்ல அன்பு இருந்தது. ஒருவருக்கு ஒருவர் மனதார நேசித்தார்கள் அது விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை. அதன் பிறகு இருவரது வாழ்க்கையும் வேறு வேறு திசையில் சென்றுவிட்டது. எனவே இவர்கள் இருவரும் பிரிவதற்கு அவர் காரணம் என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கோட் படத்திற்கு முன்னதாக இருவருக்கும் சந்திப்பு கூட நடக்கவில்லை. ஆனால் விஜயும் சங்கீதாவும் பிரிந்து 5,6 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இந்த விஷயத்தில் ஏன் த்ரிஷாவை இழுக்கிறார்கள்… யாரால் அவர் தனது மனைவியை பிரிந்தார்…”என்று கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share