சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலிலா நடிப்பில் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன், ராதிகா நடிப்பில் வெளியான தாய் கிழவி படத்தை தயாரித்தார். இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கினார்.
இந்த நிலையில் அவரது இயக்கத்தில் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கிறார்.
பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக சேயோன் படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் மதுரையில் இன்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் சேயோன் படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே பிரதீப் ரங்கராஜன் நடித்த எல்.ஐ .கே படத்தில் அவருக்கு தந்தை கதாபாத்திரத்தில் சீமான் நடித்திருந்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் சீமான் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
