நடிகை திரிஷா தனது பாட்டியின் 98 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா விக்ரம், சிம்பு, ஆர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி என கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், லியோ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த கருப்பு படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சினிமாவில் பிஸியாக இருக்கும் திரிஷா தனது குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு கொண்டாட்டங்களையும் விட்டு விடுவதில்லை.
கடந்த ஜூலை மாதம் தனது அம்மா உமா கிருஷ்ணனின் 70ஆவதுபிறந்தநாளை கோலாகடமாக கொண்டாடினார்.

இந்த நிலையில் இன்று தனது பாட்டி சாரதாவின் 98 வது பிறந்த நாளை, குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். திரிஷாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
திருஷ்டி பட்டுவிடாமல் இருக்க பயன்படுத்தப்படும் நீல நிற எமோஜியையும் பயன்படுத்தியுள்ளார் திரிஷா.
முன்னதாக கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
