1,000 கோடி சாம்சங் முதலீடு… தைவானிய தொழில் பூங்கா… டிஆர்பி ராஜா அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Minnambalam

TRB Raaja announced Samsung

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 25) தொழில்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது புதிய அறிவிப்புகளை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார். TRB Raaja announced Samsung

டிஆர்பி ராஜா வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னைக்கு அருகில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டிற்கு சாதகமான சூழலை அமெரிக்கா, ஜெர்மனி, வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks) அமைக்கப்படும்.

நாகப்பட்டினத்தில் புதிய டைடல் நியோ-மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் அப்பகுதியில் உள்ள 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ. 650 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்பூங்கா 450 ஏக்கர் பரப்பளவில் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடத்தில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். இதனால் 2,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் கடன் பெறும் சுமார் 1300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், காலக்கடன்களுக்கு பெறப்பட்டு வரும் ரூ.5000 முதல்
ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வுக்கட்டணம் இந்நிதியாண்டில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து மேலும் 100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக, அதாவது ஒட்டுமொத்தமாக 3,500 என்ற எண்ணிக்கையில் தொழிலாளர்களின் அளவை உயர்த்திட, புதியதாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. TRB Raaja announced Samsung

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share