மெரினாவில் போக்குவரத்து மாற்றம்!

Published On:

| By Minnambalam

traffic chenages in marina

அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (மே 27) சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ADVERTISEMENT

“அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்குத் தகுந்தவாறு இன்று முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

அதன்படி, காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

ADVERTISEMENT

கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப் பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை – பாரதி சாலை சந்திப்பில் திருப்பப் பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

ADVERTISEMENT

அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை – பெல்ஸ் ரோடு – வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்)

வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

ஜப்பானில் கோமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

கேன்ஸ் விழாவில் அனுஷ்கா ஷர்மா: கோலி ரியாக்‌ஷன்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share