டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Minnambalam

top ten news today in Tamil January 8 2024

பிரதமர் மோடி கலந்துரையாடல்! top ten news today in Tamil January 8 2024

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 8) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

ADVERTISEMENT

உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று இரண்டாவது நாளாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கனமழை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பயணம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக இன்று இங்கிலாந்து செல்கிறார்.

போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அமமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை!

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அமமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தர்மபுரியில் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 599 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை – ஜிம்பாப்வே மோதல்!

இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய புரோ கபடி லீக் போட்டிகள்!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் யு மும்பா, தபாங் டெல்லி அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நண்டு சூப்

காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ

top ten news today in Tamil January 8 2024

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share