ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன்
ஆட்சியில் பங்கு, மது ஒழிப்பு மாநாடு குறித்த அரசியல் விவாதங்களுக்கிடையே விசிக தலைவர் திருமாவளவன் இன்று (செப்டம்பர் 16) காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.
முன்பதிவில்லா வந்தே பாரத் ரயில்!
நாட்டின் முதல் முன்பதிவில்லா வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று குஜராத்தில் தொடங்கி வைக்கிறார்.
நாமக்கல் முதல் மாமன்ற கூட்டம்!
புதியதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை புத்தக திருவிழா நீட்டிப்பு!
மதுரை புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைவதாக இருந்த நிலையில் வாசகர்களின் அமோக ஆதரவால் நாளை ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் வேலைவாய்ப்பு!
இஸ்ரேல் நாட்டில் கட்டுமான துறையில் 10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதற்கான ஆட்தேர்வு புனேயில் இன்று துவங்குகிறது.
5 லட்சம் ரூபாய் அனுப்பும் வசதி அறிமுகம்!
யுபிஐ செயலியில் 5 லட்சம் ரூபாய் வரையில் பணம் அனுப்பும் புதிய வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்!
ஆர்.ஜே பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்!
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸின் நிறுவனம் ஐபிஓ இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
வெயில் வாட்டி எடுக்கும்!
தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 183வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.75 ஆகவும், டீசல் ரூ.92.34 ஆகவும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…