உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 13) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான்
அதிபர் தேர்தலில் களம்காணும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தரங்கம்!
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தரங்கம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அல்சூரில் உள்ள பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.
ரயில் விபத்து – உயர்மட்ட விசாரணைக் குழு!
கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது.
வீடுகளில் கறுப்பு கொடி!
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 810 வது நாளாக போராடிவரும் நிலையில் இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளனர்.
11 மாவட்டங்களில் கனமழை!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில்!
3 நாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னை நோக்கி செல்ல வசதியாக திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06003) இயக்கப்படுகிறது. இன்று மாலை 5.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில், நாளை அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை சென்றடைகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதல்!
2024 மகளிர் T20 உலகக்கோப்பை தொடரில் குரூப் A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று சார்ஜா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹாக்கி இந்தியா லீக் ஏலம்!
கடந்த ஏழு ஆண்டுகளாக இல்லாத நடைபெறாமல் இருந்த ஹாக்கி இந்தியா லீக் (HIL) தொடரில் போட்டியிடும் வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 209-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பொது இடங்களில் வாந்தி வரும் உணர்வு… தடுப்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: காய்கறிகளை இப்படித்தான் பத்திரப்படுத்த வேண்டும்!