இன்னும் எத்தனை? தமிழ்நாட்டில் இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமல்- அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும்?

Published On:

| By Mathi

Toll Fee Hike

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். வாகனங்களின் வகையைப் பொறுத்து, கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 5% முதல் 10% வரை கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

ADVERTISEMENT

ஏற்கனவே சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் விலை உயர்வை எதிர்கொண்டுள்ள பொதுமக்கள், சுங்க கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் அதிகரிப்பதால், லாரி வாடகை உயரும், இதன் காரணமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அதன் சுமை சாமானிய மக்களைச் சென்றடையும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share