TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு- 6,574 பணியிடங்கள்… ஜன. 10-ல் தேர்வு- நவ.5 வரை விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Mathi

Jobs-TNPSC Group 4

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (Group 4) மூலம் 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு 2027-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில், பல்வேறு துறைகளில் உள்ள 46 பதவிகளில் மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது; கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு இந்த எண்ணிக்கை மாற்றப்படலாம்.

ADVERTISEMENT

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறைப் பதிவு செய்த பின்னர் தேர்வுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 5-ம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய நவம்பர் 9-ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் நவம்பர் 11-ம் தேதி இரவு 11.59 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குரூப் 4 எழுத்துத் தேர்வு 2027-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிகள் மாறுபடுகின்றன. வயது வரம்பு 2026-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு விதிகளின்படி வயது வரம்புச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

TNPSC அறிவிக்கை முழுமையாக…

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share