இனி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் – அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 1) பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், “விவசாயிகளின் தோழன் நமது முதல்வரின் ஆட்சியில் மக்கள் நலன் மற்றும் விவசாயி நலன் சார்ந்த முயற்சிகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் நிற்காது. அந்த அடிப்படையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் உணவு பொருள் விற்பனை விலையேற்றத்தை குறைக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்

ADVERTISEMENT

ஜூலை 6ஆம் தேதி, 6.7.2026 அன்று நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருள் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த விலை கண்காணிப்புக் குழு கூடுவது என்றும், தேவைப்படும் நேர்வுகளில் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து அப்பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலை விவரங்கள் தினந்தோறும், வாரா வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.

ADVERTISEMENT

இதே நேரத்தில் இதற்கு முந்திய ஆட்சி காலங்களில் இந்த விலை கண்காணிப்பு குழு கூட்டமானது ஐந்து ஆண்டில் இரண்டு முறை மட்டுமே, அதாவது நவம்பர் 2023 மற்றும் ஏப்ரல் 2024 மட்டுமே கூட்டப்பட்டது.

தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலையேற்றத்தால், போக்குவரத்து செலவுகள் உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலையின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு விலை ரூ.56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதனை அடுத்து ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், மக்களின் நலன் காக்கும் அரசு தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டுமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமான முறையில் விநியோகிக்க அரசு முடிவு செய்து ஒரு கிலோ ரூ. 35க்கு நகரப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் அமுதம் அங்காடிகள் மற்றும் நகரப்புற பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நகரப் பகுதியில் அமைந்துள்ள 8,739 நியாயவிலை கடைகள் ( 80 லட்சம் குடும்பத்தார்கள் இந்த பகுதியில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 35% குடும்ப அட்டைகள்) இவங்களுக்கு 3.9.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் வீதம் வழங்கப்படும்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share