மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். 

டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்வர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமான மூலம் சேலம் வந்தார். 

ADVERTISEMENT

சேலம் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் வந்தார். வரும் வழியில் மேச்சேரி பகுதியிலும் மேட்டூரிலும் திறந்தவெளி வேனில் ரோடு ஷோவாக வந்தார்

அவருக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ADVERTISEMENT

இந்த சூழலில் காலை 11:40 மணிக்கு முதல்வர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 

பின்னர் மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் பூக்களை தூவி வரவேற்றார். 

ADVERTISEMENT

தொடர்ந்து விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் மேட்டூர் அணை தொடர்பான விளக்கப் புகைப்படங்களையும் பார்வையிட்டார். 

இந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது 

93 ஆண்டுகால மேட்டூர் அணையின் வரலாற்றில் கால தாமதமாக 62 வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share