திமுக மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட 76 பிரதிநிதிகள்.. முழு விவரம்

Published On:

| By Mathi

திமுக மறுசீரமைப்பு 76 பிரதிநிதிகள்

திமுகவில் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடும் 76 பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிவிப்பு:
கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழகத் தலைவர் அவர்கள் 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கழக சீரமைப்புக்குழு வகுத்துத் தந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூராட்சி – வட்ட – கிளைக் கழகங்களை மறுசீரமைத்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை நேரடியாக மேற்பார்வையிடுவதற்காக ஒரு வருவாய் மாவட்டத்திற்கு இருவர் வீதம் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் நடத்தும் மாவட்டச் செயற்குழு கூட்டங்கள் அனைத்தும் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். பகுதி – நகரம் – ஒன்றியம் – பேரூராட்சி – வட்ட – கிளைக் கழகங்கள் மறுசீரமைப்பில் ஏதேனும் கருத்துகள், மாறுபாடுகள் இருப்பின் கழகத்தினர் தமது மாவட்டத்திற்குரிய தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன், வரும் புதன்கிழமை (செப்டம்பர் 02, 2026) அன்று கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் மாலை 5 மணியளவில் காணொலிக் கூட்டம் நடைபெறும். மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சட்டப்பேரவை நடைபெறாத நாட்களில் நடத்துபவறைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடும் 76 பிரதிநிதிகள்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share