VIDEO: ’அந்த விவகாரம்’.. ஆட்டம் காணப் போகும் விஜய் அரசு.. வைகோ பகிரங்க எச்சரிக்கை!

Published On:

| By Mathi

TN Officials Conspiracy against Vijay Govt. Vaiko warning

தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு எதிராக மூத்த அதிகாரிகள் சதி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னையில் நேற்று ஜூலை 17-ந் தேதி நடைபெற்ற மதிமுகவின் வார ஏடான சங்கொலியின் 30-ம் ஆண்டு தொடக்க விழாவில் வைகோ பேசியதாவது: நாங்கள் தீர்க்கமான முடிவெடுத்து தமிழக வெற்றிக் கழகத்தோடு கரம் கோர்த்திருக்கிறோம். சும்மா லேசா மிரட்டிப் பார்க்காதீங்க, ஆட்சியை கவிழ்த்துருவோம், ஆட்சி கவுந்துருவோம்னு.. திமுக பாஜக-வோட அண்டர்ஸ்டாண்டிங் வைக்கப்போகிறதா? செஞ்சு பாருங்க, ஐ சேலஞ்ச்! நான் சவால் விடுறேன், எலக்சன் வரட்டும், 180 இடங்கள், விஜய் அணி ஜெயிக்கும்.

ADVERTISEMENT

ஆட்சி ஆறு மாசம் நீடிக்காது, அஞ்சு மாசம் நீடிக்காதுன்னு சொல்றீங்களே, ஏன்? கரப்ஷன்ங்குறதை வேரோடு களை எடுத்துவிட்டாரே விஜய் அதுக்காகவா? இதை விட என்னய்யா சாதிக்கணும்? ரோடு போடணுமா? டேம் கட்டணுமா? பாலம் வைக்கணுமா? என்ன சாதிக்கணும்? புரையோடிவிட்ட கரப்ஷனை அடிமட்ட வேரிலிருந்து தூக்கி எறிய அவர் முயல்கிறார்.

லட்சம் லட்சமாக மாதம் வாங்கிக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் கமிஷன் மொத்தமாக வரவலில்லை. அதனால அரசாங்கத்தின் கோப்புகளை மூவ் செய்யாமல் முடக்கி வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

This senior officers, they don’t cooperate. They are not moving the files, I know that. I have got my own friends in the bureaucracy. எனக்கு நண்பர்கள் இருக்காங்க, இந்த அரசை செயல்படுத்த விடக்கூடாதுன்னு அதிகாரிகள் நினைக்கிறாங்க..

மின்வெட்டால் மிகப் பெரும் பாதிப்பு வரப்போகிறது.. அதில் இந்த ஆட்சி அப்படியே ஆடப் போகிறது.. நீங்களே (திமுக) எல்லாப் பிரச்சனைகளை உருவாக்குவீங்க, போராட்டங்களை, கிளர்ச்சிகளை நடத்துவீங்க, கேள்விகளைத் தொடுப்பீங்க, சிபிஐ விசாரணை கேட்பீங்க. இதெல்லாம் செஞ்சு ஒரு நேர்மையை நிலைநாட்ட முயல்கிற ஒரு ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என நினைக்கிறீங்க..

ADVERTISEMENT

அப்படி ஒரு ஆபத்து விஜய் ஆட்சியை சூழுமானால் அதைத் தடுப்பதற்கு நாங்கள் முதல் ஆளாக வந்து நிற்போம்.

வைகோ வருவான், ஒவ்வொரு ஊருக்கும் வைகோ வருவான், அவன் குரல் கேட்கும். அந்த சகோதரன் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்த விரும்புகிறான், அந்த ஆட்சியை நடத்துவதை அலங்கோலப்படுத்திவிட்டு வீழ்த்த முயற்சி செய்கிறார்கள் என்று பேசுவேன்.

எங்களை மதித்து எங்களுக்கு மரியாதை கொடுத்து, ஆட்சிப் பீடத்திலே இருப்பவரும் அவர் சகாக்களும் மறுமலர்ச்சி திமுகவையும் மதிக்கிறார்கள், நேயத்தோடும் மரியாதையோடும் நடத்துகிறார்கள்,

யுத்த களத்திற்கு ராணுவம் போகிற போது, முன்னாளையே போய் பாதையைச் செம்மைப்படுத்துகிறவர் தான், சப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ். MDMK பிஹேவ் லைக் சப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ். இவ்வாறு வைகோ பேசினார்.

வீடியோ

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share