தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில்,
- “தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை குற்றப்பிரிவு மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகப்பிரியா சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- இதேபோல் ராமேஸ்வரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மீரா சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
