தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஆட்சியர், ஐஜி உட்பட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக கடந்த 2018 மே 22 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.
அப்போது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய கொடூர சம்பவமாக பார்க்கப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது அரசு.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், தூத்துகுடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென்மண்டல ஐஜியாக சைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
