இசைப் பிரியர்களுக்கு ‘மெகா’ ஜாக்பாட்! அரசு இசைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Published On:

| By Santhosh Raj Saravanan

tn govt music college admission 2026 apply online eligibility fees details

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை, கோவை, மதுரை, திருவையாறு உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் அரசு இசைக்கல்லூரிகளில் (TN Govt Music College) நடப்பு 2026-ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு இளநிலைப் பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் மாலைநேர சான்றிதழ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு (Online Admission) தற்போது அதிரடியாகத் தொடங்கியுள்ளது.

என்னென்ன கோர்ஸ்கள் இருக்கு?

இளங்கலை இசைப் படிப்பு (B.A. Music – 3 ஆண்டுகள்):

ADVERTISEMENT

பாடப்பிரிவுகள்: குரலிசை/வாய்ப்பாட்டு (Vocal), வீணை, வயலின் மற்றும் பரதநாட்டியம்.

கல்வித்தகுதி: நீங்கள் 12ஆம் வகுப்பு (HSC) அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வயது வரம்பு: இந்த இளங்கலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க எவ்வித அதிகபட்ச வயது வரம்பும் கிடையாது பாஸ்! யார் வேணாலும் படிக்கலாம்.

ஆண்டுக் கட்டணம்: வருடத்திற்கு வெறும் ரூ. 3,904 ரூபாய் மட்டுமே.

ADVERTISEMENT

இசைப் பட்டயப் படிப்பு (Diploma – 3 ஆண்டுகள்):

பாடப்பிரிவுகள்: வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம் மற்றும் தவில்.

கல்வித்தகுதி: நீங்கள் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆண்டுக் கட்டணம்: வருடத்திற்கு வெறும் 1,530 ரூபாய் மட்டுமே.

இசை ஆசிரியர் பயிற்சிப் படிப்பு (Music Teacher Training – 1 ஆண்டு):

கல்வித்தகுதி: நீங்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், பி.ஏ. இசை (B.A. Music) அல்லது இசைக்கலைமணி பட்டயம் (Diploma) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 16 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் பாஸ்!.

ஆண்டுக் கட்டணம்: வருடத்திற்கு 1,530 ரூபாய் மட்டுமே.

மாலைநேர இசைச் சான்றிதழ் படிப்பு (Evening Course – 2 ஆண்டுகள்):

பாடப்பிரிவுகள்: குரலிசை, வீணை மற்றும் வயலின்.

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 17 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் சேரலாம், அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை பாஸ்!.

ஆண்டுக் கட்டணம்: வருடத்திற்கு வெறும் 1,383 ரூபாய் மட்டுமே.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் கலை பண்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.artandculture.tn.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கே முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Government Music College Admission 2026’ என்ற ஆன்லைன் விண்ணப்ப லிங்க்கை கிளிக் செய்யுங்கள் பாஸ்!.

உங்களது பெயர், மொபைல் எண், கல்விச் சான்றிதழ்கள் (10th/12th), ஜாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படத்தைச் சரியான அளவில் ஸக்கேன் செய்து அப்லோட் பண்ணுங்க. ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, அப்ளிகேஷனை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்க வேண்டும் பாஸ்.

கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு இசைக்கல்லூரி முதல்வர்களை நேரில் சந்தித்தோ அல்லது போன் மூலமாகவோ தொடர்பு கொண்டு முழு விவரங்களை அறியலாம்.

இந்த அரசு இசைக்கல்லூரிகள்ல சேர்ற மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பா மாதாந்திரக் கல்வி ஊக்கத்தொகையாக (Educational Incentive) 1,500 ரூபாய் வழங்கப்படுது பாஸ்! நீங்க கட்டுற ஆண்டுக் கட்டணத்தை விட உங்களுக்குக் கிடைக்கிற ஊக்கத்தொகை தான் இங்க அதிகம், அதனால இது ஒரு செம ஆஃபர். படிக்க வர்ற தம்பி, தங்கச்சிகளுக்கு அலைச்சல் இல்லாத வகையில், நகரப் பேருந்துகளில் சென்று வர 100% இலவச பேருந்து பயண அட்டை (Free Bus Pass) வழங்கப்படும்.

பி.ஏ. இசை மற்றும் மாலைநேர கோர்ஸ்க்கு வயது வரம்பே கிடையாது பாஸ்! அதனால வேலைக்கு போயிட்டு இருக்கிறவங்க, இல்லத்தரசிகள், பெரியவங்கன்னு இசை மேல ஆர்வம் இருக்குற யார் வேணாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கலாம். அப்ளிகேஷன் போர்ட்டல் இப்போவே ஓப்பன் ஆகிடுச்சு பாஸ். இடங்கள் மிகக் குறைவா (Limited Seats) இருக்கிறதுனால, “அப்புறம் பாத்துக்கலாம்”னு அசால்ட்டா இருக்காம இன்னைக்கே உங்க ஆன்லைன் அப்ளிகேஷனைத் தட்டி விடுங்க!

இசைங்கிறது வெறும் கலை மட்டும் இல்ல பாஸ், அது மனசுக்குக் கிடைக்கிற ஒரு பெரிய மருந்து. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகள்ல முறையா இசை படிச்சு சர்டிபிகேட் வாங்குறது உங்க கரியரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகும். உங்க தன்னம்பிக்கையும் பாடும் திறமையும் இருந்தா, இந்த மே மாசத்துல நீங்களும் ஒரு மாஸ் இசைப் பட்டதாரியா மாறி சாதிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share