வேலைக்கு போயிட்டே ஐஐடி டிகிரி! சென்னை ஐ.ஐ.டி-யின் ஆன்லைன் எம்.டெக் அட்மிஷன்

Published On:

| By Santhosh Raj Saravanan

iit madras web enabled mtech admission 2026 pg diploma apply online details

சென்னை ஐ.ஐ.டி (Chennai IIT) உங்களுக்கு ஒரு மெகா ‘உயர்கல்வி ஜாக்க்பாட்’டைத் தட்டி விட்டுருக்கு. வேலைக்கு போயிட்டே, வீட்ல இருந்துகிட்டே படிக்க ஆன்லைன் (Web-Enabled) எம்.டெக் மற்றும் பிஜி டிப்ளமோ அட்மிஷன் இப்போ அதிகாரப்பூர்வமா தொடங்கியிருக்கு! சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) நிறுவனம் தங்களது டிஜிட்டல் கல்வி மையத்தின் (CODE) மூலமாக, பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் தங்களின் வேலை அல்லது வாழ்விடத்தை மாற்றாமல் உயர்கல்வி பயில ஏதுவாக ஆன்லைன் வழியிலான எம்.டெக் மற்றும் முதுகலை டிப்ளமோ சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்தெந்தப் பிரிவுகள்ல ஜாக்பாட்?

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence): இப்போதைய உலகளாவிய ட்ரெண்டான ஏஐ (AI) தொழில்நுட்பத்தை ஆழமாகக் கத்துக்க இது ஒரு அருமையான வாய்ப்பு.

ADVERTISEMENT

இ-மொபிலிட்டி (E-Mobility): எதிர்காலமே எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) தான் பாஸ், அதுக்கான பிரத்யேகமான வடிவமைப்புப் படிப்பு இது.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் (Aerospace Engineering): விண்வெளித் துறை மற்றும் விமானத் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன கல்வி.

ADVERTISEMENT

இன்பர்மேஷன் செக்யூரிட்டி (Information Security): கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு சார்ந்த படிப்பு.

மேனுஃபேக்ச்சரிங் அனலிடிக்ஸ் (Manufacturing Analytics): உற்பத்தி மற்றும் தொழிற்சாலைத் துறைகளில் தரவுகளைக் கையாண்டு பகுப்பாய்வு செய்யும் நவீன தொழில்நுட்பம்.

ADVERTISEMENT

 இதர பிரிவுகள்: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பிராசஸ் சேஃப்டி (Process Safety) ஆகிய பிரிவுகளிலும் எம்.டெக் மற்றும் டிப்ளமோ படிக்கலாம் பாஸ்!.

யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு?

எம்.டெக் படிப்பு (M.Tech Program): நீங்கள் 4 ஆண்டு பி.இ/பி.டெக்/பி.எஸ் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக்/எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2-வில் கணிதப் பாடம் கட்டாயமாக இருந்திருக்க வேண்டும்.

மிக முக்கியமாக, உங்களிடம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வேலை அனுபவம் (Work Experience) இருக்க வேண்டியது கட்டாயம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதரவுக் கடிதம் (Letter of Support – LoS அல்லது கம்பெனி MoU) சமர்ப்பிக்க வேண்டும்.

முதுகலை டிப்ளமோ படிப்பு (PG Diploma Program): இந்த வாய்ப்பு இளம் பட்டதாரிகள் மற்றும் பிரெஷர்களுக்கு (Freshers) ஒரு மிகப்பெரிய ‘கோல்டன் டிக்கெட்’!.

2 ஆண்டுகள் வேலை அனுபவம் இல்லாத, ஆனால் தகுதியான பிரிவில் டிகிரி முடித்த தம்பிகள் மற்றும் தங்கச்சிகள் நேரடியாக இந்த பிஜி டிப்ளமோ படிப்பில் சேரலாம். இதில் படித்து முடித்த பிறகு தகுதிகள் பூர்த்தியானதும், இதை அப்படியே எம்.டெக் படிப்பாக உயர்த்திக் கொள்ளும் (Upgrade) சலுகையும் உண்டு.

முக்கியத் தேதிகள் மற்றும் தேர்வு முறை

விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் மே 31, 2026 தான் அப்ளை பண்ண லாஸ்ட் டேட் பாஸ்!.

நுழைவுத் தேர்வுகள் (Entrance Exams): ஜூன் மற்றும் ஜூலை 2026 ஆகிய மாதங்களில் இதற்கான கம்ப்யூட்டர் சார்ந்த நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2026-ல் தொடங்கும். வேலைக்குச் செல்பவர்களுக்குச் சிரமம் இல்லாத வகையில் நேரடி ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் மாலை நேரங்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ (Evenings or Weekends) மட்டுமே நடத்தப்படும் பாஸ்!.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் சென்னை ஐ.ஐ.டி-யின் அதிகாரப்பூர்வ கல்விப் பக்க இணையதளமான code.iitm.ac.in/webmtech என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும்.

உங்களது செல்லுபடியாகும் ஜிமெயில் (Gmail ID) முகவரியைக் கொடுத்துப் புதிய கணக்கை உருவாக்க வேண்டும். அதன் பிறகு உங்களது தனிப்பட்ட விவரங்கள், தொழில்முறை வேலை விவரங்கள் (Professional Details) மற்றும் கல்விச் சான்றிதழ்களை எந்தத் தவறும் இல்லாமல் அப்லோட் செய்ய வேண்டும்.

ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 2 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு பாடப்பிரிவிற்கான விண்ணப்பக் கட்டணம் 3,000 ரூபாய் ஆகும். கட்டணத்தை ஆன்லைன் போர்ட்டல் மூலம் செலுத்தி அப்ளிகேஷனை வெற்றிகரமாகச் சமர்ப்பித்து, அதன் ரசீதை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்!.

நீங்க உங்க வேலையை ராஜினாமா செய்யாமலோ, அல்லது வேற ஊருக்கு இடம் மாறாமலோ உங்க கரியரையும் படிப்புத் திறனையும் ஐஐடி பிராண்ட் மூலம் அடுத்த லெவலுக்குக் கொண்டு போக இது ஒரு மெகா சான்ஸ். ஆன்லைன் கோர்ஸ் என்றாலும் இதற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் செமஸ்டர் இறுதித் தேர்வுகள் இந்தியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நேரடியாக (In-person Exam Centres) மட்டுமே நடத்தப்படும்!. அதனால எக்ஸாமுக்கு பக்கா பிளான் பண்ணிப் படிங்க.

இந்த படிப்பில் ‘Project-based learning’ எனப்படும் செய்முறைத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். நீங்கள் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் எதிர்கொள்ளும் சவால்களையே கூட ஐஐடி பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு பிராஜெக்ட் ஆக எடுத்துச் செய்யலாம். மே 31 வரை டைம் இருக்குன்னு வெயிட் பண்ணாதீங்க பாஸ். ஐஐடி போர்ட்டல் கடைசி நேரத்துல சர்வர் நெரிசலால் ஹேங் ஆக வாய்ப்பு இருக்கு, அதனால இன்னைக்கே அப்ளை பண்ணி உங்க சீட்டை உறுதி செய்யுங்க.

இந்தியாவோட டாப் கல்வி நிறுவனத்துல ஒரு போஸ்ட் கிராஜுவேட் டிகிரி வாங்குறது உங்க கரியருக்கு ஒரு மிகப்பெரிய ‘மாஸ்’ அங்கீகாரத்தைக் கொடுக்கும் பாஸ். வேலை பார்த்துக்கிட்டே ஐஐடி-யன் (IITian) ஆகக் கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பைச் சரியா பயன்படுத்திக்கோங்க. முயற்சி பண்ணuனா இந்த மே மாசத்துல உங்க கரியர்ல ஒரு மாஸ் டர்னிங் பாயிண்ட் அமைஞ்சு நீங்களும் கார்ப்பரேட் உலகத்துல ஒரு டாப் அதிகாரியா கலக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share