சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ (CBSE) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், இந்த ஆண்டு முதன்முறையாகப் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (On-Screen Marking – OSM) என்ற டிஜிட்டல் திருத்தும் முறையினால் தான் மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறைந்ததாகப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் புகார்கள் எழுந்தன. இந்த மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் மத்திய பள்ளிவிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் ஞாயிற்றுக்கிழமை (மே 17, 2026) ஒரு அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இந்த அதிரடி கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளார்.
பீஸ் எவ்வளவு குறைஞ்சிருக்கு?
விடைத்தாள் நகல் பெற (Scanned Copy of Answer Sheet): மாணவர்கள் தங்களது திருத்தப்பட்ட விடைத்தாளை இணையதளத்தில் பார்க்கவோ அல்லது அதன் நகலைத் தரவிறக்கம் செய்யவோ முன்பு 700 ரூபாய் கட்டணமாக இருந்தது. ஆனால் இனி வெறும் 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் பாஸ்!.
மதிப்பெண் சரிபார்ப்பு (Verification of Marks): விடைத்தாளின் மொத்த மதிப்பெண்களைக் கூட்டிச் சரிபார்க்க (Totalling & Verification) முன்பு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போ அதுவும் அதிரடியாகக் குறைக்கப்பட்டு வெறும் 100 ரூபாய் ஆக மாற்றப்பட்டுள்ளது.
கேள்வி வாரியாக மறுதிருத்தம் (Re-evaluation Per Question): நீங்கள் எழுதிய குறிப்பிட்ட ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் மறுமதிப்பீடு செய்ய முன்பு ஒரு கேள்விக்கு 100 ரூபாய் கட்டணம் இருந்தது. ஆனால் தற்போதைய புதிய விதியின்படி ஒரு கேள்விக்கு வெறும் 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் பாஸ்!.
மெகா ரீஃபண்ட் ஆஃபர் (Full Refund Policy): இதுதான் பாஸ் இங்க இருக்குற ‘மாஸ்’ அப்டேட்! ஒருவேளை நீங்கள் மறுமதிப்பீட்டிற்கு (Re-evaluation/Verification) விண்ணப்பித்து, உங்களது மதிப்பெண்கள் உயர்ந்தால், நீங்கள் விண்ணப்பத்திற்காகச் செலுத்திய கட்டணம் முழுமையாக உங்களுக்கே திரும்ப வழங்கப்படும் (Refunded) என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம்: ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் பாதுகாப்பானதா?
இந்த ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை முற்றிலும் பாதுகாப்பானது, துாரநோக்குடையது மற்றும் சர்வதேச தரத்திலான வெளிப்படைத்தன்மை கொண்டது என கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 12ஆம் வகுப்பிற்கான சுமார் 98 லட்சம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்போடு (Three Levels of Security) இந்த டிஜிட்டல் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சில விடைத்தாள்களில் மாணவர்கள் மிக லேசான நிறமுடைய மை (Light Ink) பயன்படுத்தி எழுதியிருந்ததால், ஸ்கேன் செய்யும்போது வாசிப்பதில் சிறிய சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மாணவர்களின் பயத்தைப் போக்க இந்த ரீவேல்யுவேஷன் சலுகை மிக வேகமாக வழங்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு உங்க பேப்பர் மேல முழு நம்பிக்கை இருந்தா பயப்படாம அப்ளை பண்ணுங்க பாஸ். மார்க் ஏறினா கட்டின காசு முழுசா உங்க கைக்கே வந்துடும், அதனால இது ஒரு ‘நோ-ரிஸ்க் ஜாக்பாட்’.
ஆன்லைன்ல அப்ளை பண்ணும்போது ரீஃபண்ட் காசு வர்றதுக்காக உங்களோட அல்லது பெற்றோரோட பேங்க் அக்கவுண்ட் விபரங்களைச் சரியா குடுங்க பாஸ். நெட் சென்டர்க்காரங்களோட அக்கவுண்டைக் கொடுத்து ஏமாந்துடாதீங்க.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பத் தேதிகள் சிபிஎஸ்இ வெப்சைட்ல சீக்கிரமே அப்டேட் பண்ணிடுவாங்க. அடிக்கடி அதிகாரப்பூர்வ வெப்சைட்டை செக் பண்ணுங்க. மார்க் குறைஞ்சதுக்கு இந்த டிஜிட்டல் சிஸ்டம் தான் காரணம்னு நினைச்சு மனசை விட்டுடாதீங்க. உங்களுக்கான மறுவாய்ப்பை சிபிஎஸ்இ இப்போ ரொம்பக் குறைந்த விலையில கொடுத்திருக்கு, பயன்படுத்திக்கோங்க பாஸ்!.
அதிகப்படியான கட்டணத்தால அப்ளை பண்ண முடியாம தவிச்ச ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு இந்த அதிரடிக் கட்டணக் குறைப்பு ஒரு ‘கோல்டன் டிக்கெட்’ பாஸ். உங்க உழைப்புக்கு ஏத்த மார்க் கண்டிப்பா உங்களுக்குக் கிடைக்கும். முயற்சி பண்ணுனா இந்த மே மாசத்துல உங்க மார்க்ஷீட்ல ஒரு மாஸ் அப்டேட் வந்து நீங்களும் கெத்தா காலேஜ்ல கால் பதிக்கலாம்!
