சிபிஎஸ்இ (CBSE) வாரியம் செப்டம்பர் 2026-க்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சிடெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மே 11 முதல் தொடங்கியுள்ளது. மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியமான தகுதியாகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 10, 2026
கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூன் 10, 2026.
விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window): ஜூன் 15 முதல் ஜூன் 18, 2026 வரை.
தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 6, 2026 (ஞாயிற்றுக்கிழமை). விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் செப்டம்பர் 5ஆம் தேதியும் தேர்வு நடத்தப்படலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
யாரெல்லாம் இந்த ஜாக்பாட்டைத் தட்டலாம்?
- தாள் 1 (வகுப்பு 1 முதல் 5 வரை): நீங்கள் 12ஆம் வகுப்பு (Senior Secondary) முடித்து, அதனுடன் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (D.El.Ed/B.El.Ed) அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- தாள் 2 (வகுப்பு 6 முதல் 8 வரை): நீங்கள் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் (Graduation) பி.எட் (B.Ed) முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது பாஸ்!
குறிப்பு: 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியராக விரும்பும் தம்பிகள் இரண்டு தாள்களையும் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டண விபரம்
பொது மற்றும் ஓபிசி (General/OBC) பிரிவினர்:
- ஏதேனும் ஒரு தாள் (Paper I or II) மட்டும் எழுத 1,000 ரூபாய்.
- இரண்டு தாள்களும் (Both Papers) எழுத 1,200 ரூபாய்.
எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் (SC/ ST/ Diff. Abled):
- ஏதேனும் ஒரு தாள் மட்டும் எழுத 500 ரூபாய்.
- இரண்டு தாள்களும் எழுத 600 ரூபாய்.
பணம் செலுத்தும் முறை: டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் மட்டுமே பீஸ் கட்ட முடியும்.
சிபிஎஸ்இ இந்த முறை ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு, இதுவரைக்கும் நாமளே எக்ஸாம் சென்டர் சிட்டியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனா, இந்த முறை மாணவர்கள் தங்களது தேர்வு மைய நகரத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது.
மாணவர்களுக்கான தேர்வு மைய நகரத்தைச் சிபிஎஸ்இ வாரியமே ‘ரேண்டம்’ (Random) முறையில் தானாக ஒதுக்கும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் சிடெட் அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கே முகப்புப் பக்கத்தில் உள்ள ‘CTET September 2026 Registration’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். உங்களது விபரங்களைப் பதிவு செய்து, அப்ளிகேஷன் ஃபார்மைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யுங்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, கன்பர்மேஷன் பக்கத்தை (Confirmation Page) டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பாஸ்!.
ஒருமுறை நீங்க சிடெட் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா, அந்த சர்டிபிகேட் உங்க ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாகும். அதனால இது ஒரு மிகப்பெரிய ‘லைஃப் செட்டில்மெண்ட்’ வாய்ப்பு!
இந்தத் தேர்வுல நெகட்டிவ் மார்க்கிங் கிடையாது. அதனால 150 கேள்விகளுக்கும் தைரியமா விடையளிக்கலாம். தேர்வு 27 மொழிகளில் நடத்தப்படுகிறது. உங்களுக்கு விருப்பமான மொழியை (உதாரணமாக தமிழ்) பாடமாகத் தேர்ந்தெடுக்க மறக்காதீங்க பாஸ்!.
ஜூன் 10 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க. கடைசி நேரத்துல சர்வர் ஹேங் ஆக வாய்ப்பு இருக்கு, அதனால இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க பாஸ்! ஆசிரியர் பணிங்கிறது ஒரு மகத்தான சேவை. மத்திய அரசுப் பள்ளிகளில் வேலை கிடைக்குறது உங்க கௌரவத்தை மட்டும் இல்ல, உங்க கரியரையும் வேற லெவலுக்குக் கொண்டு போகும்.
