இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), 2026-ஆம் ஆண்டு மே மாதத்திற்கான தனது ‘பி.எஸ்’ (BS – Bachelor of Science) பட்டப்படிப்பு சேர்க்கையைத் தற்போது தொடங்கியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்குத் தனித் தேர்வு எதுவுமின்றி நேரடிச் சேர்க்கை (Direct Entry) வழங்கப்படுகிறது.
ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் எவ்வித நுழைவுத் தேர்வுமின்றி நேரடியாகப் ‘பவுண்டேஷன்’ (Foundation Level) படிப்பில் சேரலாம். இது வெறும் சயின்ஸ் குரூப் எடுத்தவங்களுக்கு மட்டும் இல்ல பாஸ். 12-ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை (Any Stream – Arts, Commerce, Science) எடுத்துப் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதுதான் பாஸ் இங்க இருக்குற மெகா ‘அப்டேட்’. இந்த கோர்ஸில் சேர வயது வரம்பு எதுவுமே கிடையாது.
நீங்க பத்தாம் வகுப்புல கணிதம் (Mathematics) மற்றும் ஆங்கிலம் (English) பாடங்களைப் படிச்சிருக்க வேண்டியது கட்டாயம். இது ஒரு ஆன்லைன் பட்டப்படிப்பு. ஆனா, இதோட தேர்வுகள் மட்டும் நேரடியா சென்டர்களுக்கு போயி எழுதுற மாதிரி இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் மே 31, 2026ஆம் தேதிதான் உங்களுக்கான டெட்லைன்.
விண்ணப்பக் கட்டணம்: ஜேஇஇ அட்வான்ஸ்டு மூலம் நேரடியாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அட்மிஷன் கட்டணமாக 4,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீங்க நான்கு வருஷம் முழுசா படிச்சு பி.எஸ் பட்டம் வாங்க சுமார் 3.82 லட்சம் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். (இதில் பவுண்டேஷன் லெவலுக்கு மட்டும் 48,000 ரூபாய் செலவாகும்).
ஜேஇஇ அட்வான்ஸ்டு தகுதி பெற்றவர்களுக்கு அந்த நான்கு வார ‘குவாலிஃபையர்’ பயிற்சியும் கிடையாது, எக்ஸாமும் கிடையாது. இது உங்க நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு பெரிய ‘கோல்டன் டிக்கெட்’. “சார்… நாலு வருஷம் என்னால தொடர்ந்து படிக்க முடியலன்னா என்ன பண்றது?”ன்னு யோசிக்காதீங்க. ஒரு வருஷம் முடிச்சா சர்டிபிகேட், ரெண்டு வருஷம் முடிச்சா டிப்ளமோன்னு நீங்க எப்போ வேணும்னாலும் வெளியேறலாம்.
இப்போ இருக்குற ஐடி (IT) உலகத்துல ‘டேட்டா சயின்ஸ்’ படிச்சவங்களுக்குத் தான் செம மவுசு. ஐஐடி மெட்ராஸ் கொடுக்குற இந்த சர்டிபிகேட்டுக்கு உலக அளவுல பெரிய வேல்யூ இருக்கு. விண்ணப்பிக்கும்போது உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ்களைச் சரியா ஸ்கேன் பண்ணி அப்லோட் பண்ணுங்க.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ள தம்பி, தங்கச்சிகள் ஐஐடி மெட்ராஸின் அதிகாரப்பூர்வ இணையதளமான study.iitm.ac.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஐஐடி-க்குள்ள நுழையுறது உங்க லைஃபே மாத்தக்கூடிய ஒரு விஷயம். நீங்க ஜேஇஇ அட்வான்ஸ்டு தகுதி பெற்றிருந்தா, இந்த அருமையான வாய்ப்பை நழுவ விடாதீங்க.
