இன்ஜினியரிங் அட்மிஷன் – 89 ஆயிரம் பேர் ஏற்கனவே அப்ளை பண்ணிட்டாங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

tnea 2026 engineering admission registration updates 89k applicants

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் (Engineering) கல்லூரிகளில் உள்ள பி.இ/பி.டெக் (B.E/B.Tech) இடங்களுக்கான 2026-2027 கல்வியாண்டு சேர்க்கை ஆன்லைன் மூலம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

அப்ளிகேஷன் பதிவு தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 89,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன்ல பதிவு செஞ்சுருக்காங்க. இதில் 45,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே தங்களது விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி வேலையை முடிச்சுட்டாங்க.

ADVERTISEMENT

சுமார் 25,000 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை (Certificates) இணையதளத்துல வெற்றிகரமா பதிவேற்றம் செஞ்சுட்டாங்க. மேலும் அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு உண்டு. இவர்களுக்குத் தனியாகக் கவுன்சிலிங் நடத்தப்பட்டு சீட் வழங்கப்படும்.

ADVERTISEMENT

எப்படி விண்ணப்பிப்பது?

மாணவர்கள் www.tneaonline.org அல்லது www.dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக மட்டுமே அப்ளை பண்ண முடியும். உங்களது பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து முதலில் ரிஜிஸ்டர் பண்ணுங்க.

ADVERTISEMENT

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாய் மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/SCA/ST) மாணவர்களுக்கு 250 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களது +2 மார்க் ஷீட், ஜாதிச் சான்றிதழ், மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை ஸ்கேன் பண்ணி அப்லோட் பண்ணுங்க.

ஏற்கனவே 89,000 பேர் அப்ளை பண்ணிட்டாங்கன்னா, போட்டி எவ்வளவு பலமா இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க பாஸ். கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணாம இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க.

உங்களுக்கு வீட்ல நெட் வசதி இல்லையா? கவலையை விடுங்க பாஸ். தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ‘பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்’ (TFC) அமைச்சிருக்காங்க. அங்க போனா அவங்களே உங்களுக்கு ஃப்ரீயாவே ஹெல்ப் பண்ணுவாங்க.

நீங்க அப்ளை பண்ணி முடிச்ச உடனே உங்களுக்கு ஒரு ‘ரேண்டம் எண்’ வழங்கப்படும். இது உங்க ரேங்க் லிஸ்ட்ல டை (Tie) ஏற்படும்போது முன்னுரிமை கொடுக்க உதவும். நீங்க குடுக்குற மொபைல் நம்பர் ரொம்ப முக்கியம். ஏன்னா உங்களது சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் அப்டேட்ஸ் எல்லாம் அந்த நம்பருக்குத்தான் எஸ்எம்எஸ்ஸாவே வரும். 89,000 பேர் அப்ளை பண்ணிட்டாங்கன்னு பயப்படாதீங்க பாஸ். உங்க கட்-ஆப் மதிப்பெண் சரியா இருந்தா, உங்களுக்குப் பிடிச்ச காலேஜ்ல ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ இல்லன்னா ‘ஐடி’ குரூப் கிடைக்கிறது உறுதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share