ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் (IIT Madras Pravartak) உங்க வீட்டுப் பிள்ளைகளுக்காகவே ஒரு மெகா ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (Out of the Box Thinking – OOBT) கோர்ஸை தட்டி விட்டுருக்கு. இது வெறும் பாடம் இல்ல பாஸ், உங்க மூளையை ‘ஷார்ப்’ பண்ற ஒரு மேஜிக்!
ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், 2026-ஆம் ஆண்டிற்கான ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ இலவச ஆன்லைன் கோர்ஸுக்கான ரெஜிஸ்ட்ரேஷனைத் தற்போது தொடங்கியுள்ளது.
5ஆஆம் வகுப்பு படிக்கிற மாணவன்ல இருந்து, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், ஏன் ஐடி கம்பெனியில வேலை பாக்குறவங்க கூட இதுல ஜாயின் பண்ணலாம். சுருக்கமா சொன்னா, கத்துக்கணும்னு ஆர்வம் இருக்குற யாருக்குமே இங்க இடம் உண்டு.
மொத்தம் 4 லெவல்கள் (Levels 1 to 4): லெவல் 1 & 2: பள்ளி மாணவர்களுக்காக டிசைன் பண்ணப்பட்டது.
லெவல் 3 & 4: கல்லூரி மாணவர்கள் மற்றும் புரொபஷனல்ஸுக்காக உருவாக்கப்பட்டது.
என்ன கத்துக்கலாம்?: கணக்கு பாடத்தை ஏதோ பார்முலா வச்சு மனப்பாடம் பண்ணாம, லாஜிக்கா (Logic) எப்படி யோசிச்சு ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்கிறதுன்னு கத்துக்கொடுப்பாங்க. இது உங்களுடைய ‘கிரியேட்டிவ் திங்கிங்’கை வேற லெவலுக்குக் கொண்டு போகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31, 2026.
கோர்ஸ் பீஸ்: இந்தக் கோர்ஸோட வீடியோக்களைப் பார்க்கவும், கத்துக்கவும் ஒரு ரூபாய் கூட பீஸ் கிடையாது.
சர்டிபிகேட் மேட்டர்: “சார்… எனக்கு ஐஐடி மெட்ராஸ்-ல இருந்து ஒரு சர்டிபிகேட் வேணுமே”ன்னு நினைக்கிறீங்களா? அப்போ மட்டும் நீங்க ஒரு குறிப்பிட்ட எக்ஸாம் பீஸ் கட்டி, எக்ஸாம் எழுதினா போதும். ‘ரிசல்ட்’ வந்ததும் கெத்தா சர்டிபிகேட் வாங்கிடலாம்!
ஜூலை 31 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க பாஸ். கடைசி நேரத்துல சர்வர் ‘பிஸி’ ஆகி அப்ளை பண்ண முடியாம போகலாம். இன்னைக்கே உங்க பேரை ரெஜிஸ்டர் பண்ணிடுங்க.
யூபிஎஸ்சி (UPSC) இல்லன்னா நீட் (NEET) மாதிரியான பெரிய எக்ஸாம்கள்ல இருக்குற ‘ஆப்டிட்யூட்’ (Aptitude) கேள்விகளைத் தட்டித் தூக்க இந்தத் திறமை ரொம்ப உதவும்.
சர்டிபிகேட் வேல்யூ: ஐஐடி மெட்ராஸ் கொடுக்கிற சர்டிபிகேட்டுக்கு உலக அளவுல செம கெத்து இருக்கு. பின்னால நீங்க வேலை தேடும்போது இது ஒரு ‘கோல்டன் டிக்கெட்’டா அமையும். இது ஆன்லைன் கோர்ஸ்ங்கிறதால, நீங்க சென்னைக்கு வரணும்னு அவசியமே இல்லை. உங்க மொபைல் அல்லது லேப்டாப் இருந்தாலே போதும், ஐஐடி ப்ரொபசர்கள்கிட்ட இருந்து வித்தையை கத்துக்கலாம்!
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ள தம்பி, தங்கச்சிகள் ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்தக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pravartak.org.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஐஐடி-க்குள்ள நுழையுறதே பெரிய விஷயம், அங்க இருக்குற அறிவை நம்ம வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துருக்காங்க. காசு இல்லையேன்னு இனிமே கவலைப்படாம, இந்த இலவச வாய்ப்பைப் பயன்படுத்தி உங்க மூளையை அப்டேட் பண்ணுங்க.
