தமிழக உயர்கல்வித்துறை, 2026-2027 கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை (TNGASA 2026) நேற்று தொடங்கிவிட்டது. வெறும் 50 ரூபாய்ல உங்க டிகிரி கனவு நனவாகப் போகுது, மிஸ் பண்ணிடாதீங்க.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்பு (UG Courses) முதலாமாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் களைகட்டத் தொடங்கியுள்ளது. “டைம் ஓடிக்கிட்டே இருக்கு பாஸ், இன்னைக்கே உங்க போன் அல்லது லேப்டாப் எடுத்து வேலையை ஆரம்பிங்க!”
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29, 2026. (இதுதான் உங்க டெட்லைன்!).
அப்ளிகேஷன் விலை: பொதுப்பிரிவு, பிசி, எம்பிசி (OC/BC/BCM/MBC): விண்ணப்பக் கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவுக்கட்டணம் 2 ரூபாய். மொத்தம் 50 ரூபாய், எஸ்சி, எஸ்டி (SC/SCA/ST): இவங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
எப்படி விண்ணப்பிப்பது?
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்துலயும் இருக்குற அரசு கலைக் கல்லூரிகள்ல மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centers – TFC) அமைச்சிருக்காங்க. அங்க போனா அவங்களே உங்களுக்கு ஃப்ரீயாவே ஹெல்ப் பண்ணுவாங்க.
நீங்க அப்ளை பண்ணும்போது எத்தனை காலேஜ் வேணும்னாலும் செலக்ட் பண்ணலாம். ஆனா ஒவ்வொரு 5 காலேஜுக்கும் ஒருமுறை தனியா கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால உங்களுக்குப் பிடிச்ச கோர்ஸ் இருக்குற காலேஜை முதல்லயே லிஸ்ட் போட்டு வச்சுக்கோங்க. உங்களுடைய +2 மார்க் ஷீட் (இன்டர்நெட் காப்பி), கம்யூனிட்டி சர்டிபிகேட், போட்டோ, மற்றும் ஆதார் கார்டு இதையெல்லாம் இப்போவே ஸ்கேன் பண்ணி வச்சுக்கோங்க.
நீங்க குடுக்குற மொபைல் நம்பரும் ஈமெயில் ஐடியும் உங்க சொந்த நம்பரா இருக்கட்டும். ஏன்னா கவுன்சிலிங் ‘ரிசல்ட்’ மற்றும் அப்டேட்ஸ் எல்லாம் அதுக்குத்தான் எஸ்எம்எஸ்ஸா வரும். அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை உண்டு. அதற்கான விபரங்களை அப்ளிகேஷன்ல மறக்காம ‘Check’ பண்ணுங்க!
அரசு காலேஜ்ல படிக்கிறது வெறும் கௌரவம் மட்டும் இல்ல பாஸ், அது உங்க எதிர்காலத்துக்கான ஒரு பெரிய அஸ்திவாரம். குறைஞ்ச பீஸ், தரமான கல்வி, ஸ்காலர்ஷிப்னு ஏகப்பட்ட சலுகைகள் காத்துக்கிட்டு இருக்கு. அவசரப்பட்டு அதிக பீஸ் கட்டி தனியார் காலேஜ்ல சேர்றதுக்கு முன்னாடி, இந்த மே 29குள்ள அப்ளை பண்ணிப் பாருங்க!”
