காலேஜ் புரொபசர் கனவா? யுஜிசி நெட் (UGC NET) ஜாக்பாட்

Published On:

| By Santhosh Raj Saravanan

ugc net june 2026 online application dates fees details tamil

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்.டி.ஏ, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான தேசிய தகுதித் தேர்வு (UGC NET) விண்ணப்பப் பதிவை தற்போது தொடங்கியுள்ளது. “டைம் ஓடிக்கிட்டே இருக்கு, மே 20ஆம் தேதிக்குள்ள உங்க அப்ளிகேஷனைத் தட்டி விடுங்க!

விண்ணப்பிக்க கடைசி நாள், மே 20, 2026 (இரவு 11:50 மணி வரை). திருத்தம் செய்ய (Correction Window), மே 22 முதல் மே 24, 2026 வரை அவகாசம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தேர்வு நடைபெறும் நாட்கள்: ஜூன் 22 முதல் ஜூன் 30, 2026 வரை.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் (PG) முடித்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50% மதிப்பெண்கள் போதும்! (இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் ‘Apply’ பண்ணலாம்).

ADVERTISEMENT

வயது வரம்பு: ஜே.ஆர்.எஃப் (JRF) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (01.06.2026 தேதியின்படி). உதவிப் பேராசிரியர் மற்றும் பிஹெச்டி பிரிவுக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்

ADVERTISEMENT
  • பொதுப்பிரிவினருக்கு (General) 1150 ரூபாய்
  • ஓபிசி/ஈ.டபிள்யூ.எஸ் (OBC-NCL/EWS) – 600 ரூபாய்
  • எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி/மூன்றாம் பாலினத்தவருக்கு 325 ரூபாய்

இந்தத் தடவை என்ன ‘ட்விஸ்ட்’?

இனி நெட் எக்ஸாம் ரிசல்ட் மூணு விதமா வரும் பாஸ். ஒன்னு ஜே.ஆர்.எஃப் மற்றும் புரொபசர் வேலைக்கு. ரெண்டாவது புரொபசர் வேலை மற்றும் பிஹெச்டி அட்மிஷனுக்கு. மூணாவது வெறும் பிஹெச்டி அட்மிஷனுக்கு மட்டும். இந்தத் தடவை ‘ஸ்டாட்டிஸ்டிக்ஸ்’ (Statistics) பாடமும் புதுசா சேர்க்கப்பட்டுருக்கு. மொத்தம் 85 பாடங்கள்ல எக்ஸாம் நடக்குது.

இந்தத் தடவை ரிஜிஸ்ட்ரேஷன் பண்றது இன்னும் ஈஸி பாஸ். ஆதார் மூலமா ‘வெரிஃபை’ பண்ணி டக்குன்னு வேலையை முடிச்சுடலாம்.

மே 20 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க பாஸ். கடைசி நேரத்துல சர்வர் ‘ஹேங்’ ஆக வாய்ப்பு இருக்கு. இன்னைக்கே உங்க டாக்குமெண்ட்ஸை ரெடி பண்ணுங்க. இந்த எக்ஸாம்ல நெகட்டிவ் மார்க் கிடையாது. அதனால தெரிஞ்ச கேள்விகளுக்குச் சரியா பதில் சொல்லிட்டு, தெரியாத கேள்விகளையும் ஒரு கை பாத்துடுங்க.

உங்க சப்ஜெக்ட்ல நீங்க புலியா இருக்கலாம், ஆனா பேப்பர்-1 (Teaching & Research Aptitude) தான் உங்க ‘ரிசல்ட்’-ஐ தீர்மானிக்கும். அதனால அதுல கொஞ்சம் அதிக கவனம் செலுத்துங்க.

இப்போ பல யூனிவர்சிட்டிகள் பிஹெச்டி அட்மிஷனுக்கு நெட் ஸ்கோரைத் தான் கேக்குறாங்க. அதனால ரிசர்ச் பண்ண ஆசைப்படுறவங்க கண்டிப்பா அப்ளை பண்ணுங்க.

எப்படி விண்ணப்பிப்பது?

விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

ஒரு காலேஜ் புரோபசர் வேலை கிடைக்குறது ஒரு பெரிய கௌரவம். 300 மார்க்குக்கு நடக்குற இந்த எக்ஸாம்ல நீங்க மாஸ் காட்டுனா, உங்க எதிர்காலம் வேற லெவல்ல இருக்கும். முயற்சி பண்ணுனா இந்த ஜூன் மாசத்துல உங்க கேரியர்ல ஒரு புது ஒளி பிறக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share