உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தோட, மிகக் குறைந்த கட்டணத்துல சினிமா கத்துக்க தரமணி எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (MGR Government Film and Television Institute) இப்போ அட்மிஷன் விண்டோவை ஓப்பன் பண்ணிடுச்சு. சென்னையில் உள்ள தரமணி எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், 2026-2027 கல்வியாண்டிற்கான நான்கு ஆண்டு கால ‘பேச்சலர் ஆஃப் விசுவல் ஆர்ட்ஸ்’ (Bachelor of Visual Arts – B.V.A) பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த இன்ஸ்டிடியூட்ல மொத்தம் 6 முக்கியமான துறைகள்ல ஸ்பெஷலைசேஷன் இருக்கு பாஸ். உங்களுக்கு எதுல ஆர்வம்னு ஒருமுறை பாத்துக்குங்க:
- திரைக்கதை மற்றும் இயக்கம் (Direction and Screenplay Writing): ஒரு கதையை எப்படி உருவாக்குறது, அதை எப்படித் திரையில கொண்டு வர்றதுன்னு இங்க கத்துக்கலாம்.
- ஒளிப்பதிவு (Cinematography): கேமரா ஆங்கிள், லைட்டிங்னு காட்சிகளை அழகாக்குற வித்தையை இங்க சொல்லிக் குடுப்பாங்க.
- ஒலிப்பதிவு (Audiography): படத்துக்கு உயிர் கொடுக்கிற சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் மிக்ஸிங் பத்தி இங்க படிக்கலாம்.
- படத்தொகுப்பு (Film Editing): எடுக்கப்பட்ட காட்சிகளைச் சரியான வரிசையில கோர்த்து ஒரு கோர்வையான படமாக்குற எடிட்டிங் கலை இது.
- டிஜிட்டல் இன்டர்மீடியட் (Digital Intermediate): கலர் கிரேடிங் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன படிப்பு இது!.
- அனிமேஷன் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ் (Animation and Visual Effects): விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் கிராபிக்ஸ் மூலமா கற்பனை உலகத்தை உருவாக்குற படிப்பு.
யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு?
கல்வித்தகுதி: நீங்கள் பிளஸ் 2 (HSC) தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுவாக 24 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குத் தளர்வு உண்டு). இந்த ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் ஜூன் 2, 2026தான் கடைசி நாள்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் (DTE) அதிகாரப்பூர்வ இணையதளமான www.dte.tn.gov.in அல்லது நிறுவனத்தின் பிரத்யேகப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கே கொடுக்கப்பட்டுள்ள ‘MGR Film Institute Admission 2026’ லிங்க்கை கிளிக் செய்து உங்கள் விபரங்களைப் பதிவு செய்யுங்கள். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு, பிசி, எம்பிசி மாணவர்கள் 200 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது பாஸ்!. உங்களது 10, 12-ஆம் வகுப்பு மார்க் ஷீட், ஜாதிச் சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யுங்கள்.
இது வெறும் படிப்பு மட்டும் இல்ல பாஸ்; கலை சார்ந்த துறை. அதனால விண்ணப்பிக்கும்போதே சினிமா மேல உங்களுக்கு இருக்குற ஆர்வத்தை ஒரு சின்ன குறிப்பா (Statement of Purpose) தயார் செஞ்சு வச்சுக்கோங்க.
ஆன்லைன்ல அப்ளை பண்ண கையோட, உங்களுக்கு ஒரு நேர்முகத் தேர்வு (Interview) அல்லது நுழைவுத் தேர்வு இருக்கலாம். அதுல உங்க சினிமா அறிவை சோதிப்பாங்க, அதனால இப்போவே சினிமா டெக்னாலஜி பத்தித் தேடிப் படிங்க!.
இங்க படிச்சுட்டு வெளிய வந்த பல பேர் இப்போ கோலிவுட்ல பெரிய லெவல்ல இருக்காங்க. அதனால இது உங்க கரியருக்கான ஒரு மெகா லாஞ்ச்பேட். ஜூன் 2 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க. சர்வர் பிஸி ஆக வாய்ப்பு இருக்கு, அதனால இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க பாஸ்!
வெள்ளித்திரையில உங்க பேரை ஒரு கேமராமேனாவோ இல்ல டைரக்டராவோ பார்க்கணும்ங்கிறது உங்க கனவா இருந்தா, அதுக்கு இதுதான் சரியான ஆரம்பம் பாஸ். அரசு கல்லூரியில குறைந்த பீஸ்ல தரமான சினிமா கத்துக்கிட்டு நீங்களும் ஒரு மாஸ் கலைஞனா உருவாகலாம். முயற்சி பண்ணுனா, தாரமணியில இருந்து நீங்களும் கோலிவுட்டுக்கு ஒரு மெகா என்ட்ரி கொடுக்கலாம்.
