தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (10th Result) சற்று நேரத்தில் வெளியிடப்படுகின்றன.
தமிழகத்தில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மே 20-ந் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இம்முடிவுகளை வெளியிடுகிறார்.
- 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றன.
- மொத்தம் 12,467 பள்ளிகளைச் சேர்ந்த
8,82,806 மாணவர்கள்
25,801 தனித்தேர்வர்கள்
395 சிறைவாசிகள்
என 9,09,002 பேர் தேர்வு எழுதினர். - 4,219 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
- தேர்வு பணிகளில் 47,500 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
எந்த வெப்சைட்டுகள்ளில் ரிசல்ட் பார்க்கலாம் (10th Result)
இம்முடிவுகளை
- www.tnresults.nic.in
- www.dge.tn.gov.in
- results.digilocker.gov.in
ஆகிய வெப்சைட்டுகளில் பார்க்கலாம்.
- அதேபோல மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கும் எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
- 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் Hi என அனுப்பினாலும் தேர்வு முடிவுகளை பெறலாம்
- தேர்வு முடிவுகள் மற்றும் மாணவர்களுக்கான ஆலோசனைகளைப் பெற உதவி எண் 14417
