அரசு பணியில் சமூக நீதி கொள்கைகள் : குழு அமைப்பு!

Published On:

| By christopher

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்திட உரிய சட்டங்களை இயற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நிர்வாக சட்ட நிபுணர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ, வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அரசு அலுவலர்கள் தரப்பில், சட்ட விவாகரங்கள் துறை செயலர் கார்த்திகேயன், சட்டம் இயற்றல் துறை செயலர் கோபி ரவிக்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு தலைவர் சுப. வீரபாண்டியன்‌, வழக்கறிஞர்‌ சி.என்.ஜி. நிறைமதி ஆகியோர் வல்லுநர்களாகவும், மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார் சிறப்பு அழைப்பாளராகவும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

”சினிமா தொழிலாளர்களின் சம்பள பிடிப்பு தொகை எங்கே?” : ஆர்.கே.செல்வமணி

சந்திர கிரகணம் : வெறும் கண்களால் பாா்க்கலாமா?

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share