கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற ஏன் 4 நாட்கள் ஆனது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதற்கு பின் பெரும் திட்டங்கள் இருந்துள்ளன. கோவை கார் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தெளிவான தாக்குதல் தான்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். கார் வெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
மேலும் கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. தமிழ்நாடு காவல்துறை நாட்டில் திறமையான காவல்துறையாக உள்ளது. இவ்வழக்கில் தமிழக காவல்துறை சிறப்பாக பணி செய்தது.
அதேவேளையில் தமிழக காவல் துறை ஒரு கருவிதான். அவர்களால் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. இந்த வழக்கை என்.ஐ.ஏவிடம் விரைந்து ஒப்படைத்திருக்கவேண்டும். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் ஏன் 4 நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்? என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மனநல காப்பகத்தில் இணைந்த மனங்கள்!
டி20: ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து!