தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 57.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை என 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இங்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த சூழலில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சி நகராட்சி அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை முடிவில் மொத்தமாக 57.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7,49,900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜிபே மூலம் லஞ்சம் பெறப்பட்டதும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாநகராட்சி, நகராட்சிகளில் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற முழு விபரம்…


பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தொகைக்கு உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கோரியுள்ளது. முறையான விளக்கம் அளிக்கத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பாயும் என தகவல்கள் வருகின்றன.
