தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
வாக்குப்பதிவு சதவீதம்:
மதுராந்தகம் தொகுதி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தாராபுரம் தொகுதி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99% வாக்குகளும், தாராபுரத்தில் 17.55% வாக்குகளும் பதிவாகின. தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 35.55% வாக்குகளும், தாராபுரத்தில் 37.28% வாக்குகளும் பதிவாகியிருந்தது. அதேபோல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 55.19% வாக்குகளும், தாராபுரத்தில் 56.09% வாக்குகளும் பதிவாகியிருந்தது.
கடந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 3 மணி அளவில் மதுராந்தகத்தில் 72.41% வாக்குகளும் தாராபுரத்தில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
